
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் கேப்டன்ஷிப் குறித்து கவுதம் கம்பீர் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து இருந்தார். முன்னாள் பேட்ஸ்மேன் தோனியை விட சிறந்த இந்திய கேப்டன் இல்லை என்றும் அவர் செய்ததைப் போல 3 ஐசிசி கோப்பைகளை வென்ற பெரிய பாரம்பரியம் யாருக்கும் இருக்காது என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

2007 ஆம் ஆண்டு கேப்டன் பொறுப்பை ஏற்ற எம்.எஸ்.தோனி, தென்னாப்பிரிக்காவில் நடந்த முதல் டி20 உலகக் கோப்பையையில் இந்தியாவுக்கு வெற்றியை வாங்கி கொடுத்தார். 2010 ஆசியக் கோப்பையை இந்தியா வென்றது, அதன்பிறகு எல்லாவற்றிலும் மிகப் பெரிய பரிசாக வந்தது: 2011 உலகக் கோப்பை, இறுதிப் போட்டியில் தோனியே ஒரு அற்புதமான சிக்ஸர் அடித்து போட்டியை வெற்றி பெற வைத்தார்.
அதற்க்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தோனி இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக்கு பெரும்பாலும் இளைஞர்களைக் கொண்ட அணியை வழிநடத்தினார். தோனியைத் தவிர வேறு எந்த இந்திய கேப்டனும் ஒன்றுக்கு மேற்பட்ட ஐசிசி பட்டங்களை வென்றதில்லை. இது குறித்து பேசிய கம்பீர், தோனியைப் பாராட்டினார் “இந்திய கிரிக்கெட்டில் எம்எஸ் தோனியின் கேப்டன்சியை யாராலும் ஈடுகட்ட முடியாது, பல கேப்டன்கள் வந்திருக்கிறார்கள், பல கேப்டன்கள் வருவார்கள்.
ஆனால் அவரது கேப்டன்சியை யாராலும் ஈடுசெய்ய முடியாது என்று நினைக்கிறேன். அவரது கேப்டன்சியில் 3 ஐசிசி கோப்பைகளை வென்றவர், இதை விட பெரிதாக எதுவும் இருக்க முடியாது என்று நான் நினைக்கிறேன்.இது தவிர, எம்எஸ் தோனி 5 ஐபிஎல் பட்டங்களையும், 2 சாம்பியன்ஸ் லீக் பட்டங்களையும் CSK உடன் வென்றுள்ளார். மேலும் அவர் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற இளம் வீரர்களை டாப் ஆர்டரில் பேட் செய்ய அனுமதித்தார்.

“கேப்டன்சியின் காரணமாக, ஒரு பேட்டராக அவர் சாதித்ததை அவரால் சாதிக்க முடியவில்லை. கேப்டனாக பல முறை அணியை முதலில் வைத்திருக்க வேண்டும். MS கேப்டனாக இல்லாவிட்டால், அவர் 3-வது இடத்தில் பேட்டிங் செய்திருக்க முடியும். அவர் பல ODI சாதனைகளை முறியடித்திருக்க முடியும் என்று நான் நம்புகிறேன். அவர் நிறைய கோப்பைகளை வென்றுள்ளார், ஆனால் தனித்தனியாக அவர் கோப்பைகளுக்காக சர்வதேச ரன்களை தியாகம் செய்தார்,” என்று கம்பீர் கூறினார்.





