
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டியில் மூன்றில் 2 – 1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. மூன்றாவது போட்டியானது நேற்று ராஜ்கோட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் இந்திய அணிக்கு பெரிய அடியாக முதல் செஷன்னில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி இருந்தது.

இந்திய அணியில் சார்பில் ஆரம்பத்திலே ஜெய்ஸ்வால் 10 ரன்களிலும் கில் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்து வெளியேறினார்.அதன் பின் படிதாரும் 5 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் சிறப்பாக விளையாடி வந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 131 ரன்களிலும் அறிமுக நாயகன் சர்ப்ராஸ் கான் 62 ரன்ககளிலும் ஆட்டமிழந்தனர். குல்தீப் 4 ரன்களிலும் ஜடேஜா 112 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 445 ரன்களை அடித்து இருந்தது.

அதன் பின் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு தொடக்கம் சிறப்பாக இருந்தாலும் மிடில் ஆர்டரில் எந்த ஒரு வீரரும் நிலைத்து நின்று விளையாட முடியவில்லை. எனவே இங்கிலாந்து அணி 319 ரன்களில் அணைந்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன் பின் பேட்டிங் செய்த இந்திய அணியின் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை திணற வைத்து இருந்தது. இந்திய அணியின் இளம் தூண்களான ஜெய்ஸ்வால் மற்றும் சர்ப்ராஸ் கான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.
இந்திய அணி ஜெய்ஸ்வால் ரன்களிலும் சர்ப்ராஸ் கான் ரன்களில் இருக்கும் போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா டிக்ளர் செய்தார். இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 430 ரன்களை குவித்து இருந்தது. இங்கிலாந்து அணிக்கு 556 ரன்களை இலக்காக் நிர்ணயம் செய்து இருந்தது. அதன் பின் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 122 ரன்களில் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இருந்தது. அதில் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல் பட்டு இருந்தனர்.

அதில் ராஜ்கோட் ராஜாவான ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் அஷ்வின் மற்றும் பும்ரா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர். எனவே இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பதிவு செய்து இருந்தது. இதில் இந்திய அணி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அது என்னவென்றால் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி போட்டி இதுவே ஆகும்.இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தி வெற்றி பெறவைத்தார். இதில் ஆட்டநாயகன் விருதை ஜடேஜா பெற்றார்.





