மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை மழைக்கு மத்தியில் 1 – 0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்து 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியது. அதைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை தயாராகும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மீண்டும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது.

இதில் முதல் போட்டியானது நேற்று இந்திய நேரப்படி இரவு 7.00 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் பொறுமையாக. இந்த போட்டியில் கலந்து கொள்வதாக இருந்த சிராஜ் ஓய்வுஎடுக்க சென்றதால், அவருக்கு பதிலாக உமர் மாலிக்கிற்கும், சாஹலுக்கு பத்திலாக குல்தீப் யாதவிர்க்கும் வாய்ப்பு வழங்கப்படடது. இந்த வாய்ப்பு சரியாக பயன்படுத்தி கொண்ட இருவரும் சிறப்பாக பந்துவீசினார்கள்.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச முடிவு செய்தது. இந்நிலையில் உலக கோப்பை குவாலிபயரில் பெற்ற தோல்விக்கு பிறகு வெற்றியடைந்தே ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது களமிறங்கியது. ஆனால் தொடக்கமே அதிற்சியாக கயில் மேயர்ஸ் விக்கெட்டை ஹர்திக் பாண்டியா வீழ்த்தினார். அதற்கு பிறகு கொஞ்சம் முயற்சி செய்து பிராண்டன் கிங் மற்றும் அலிக் அதனாசே இருவரும் ரன்களை அடிக்க இருந்த போதிலும் அலிக் அதனாசே 22 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனால் வெஸ்ட் இன்டீஸ் அணியின் அழுத்தம் கூடியது. அதற்கு பிற்காடு ஹெட்மயர் தாக்குப்பிடிக்க முயற்சி செய்தலும் அவரும் 11 ரன்களில் ஆட்டமிலாக் ஒருகட்டத்தில் 88 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் மட்டுமே எடுத்திருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது பின்னர் 114 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குறிப்பிடத்தக்க வகையில் இந்த போட்டியில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார், மீதம் இருக்கும் விக்கெட்டுகளை ஹர்திக், முகேஷ், தாகூர் முறையே வீழ்த்தினார்.

இதனையடுத்து 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இத சுலபமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ஒரு பெரிய மாற்றமே நடந்தது. அதாவது வழக்கமாக களமிறகுக்கும் ரோஹித் ஷர்மா களமிறங்காமல் சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷான் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆனால் சுப்மன் கில் இந்த முறையும் கேட்ச் கொடுத்து வெறும் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதற்கு பிறகு இஷான் கிஷான் அதிரடியாக விளையாட பின்னர் வந்த சூரிய குமார் யாதவ் 19 ரன்களில் ஆட்டமிழக்க இஷான் கிஷான் அரை சதம் விளாசினார். பின்னர் வந்த தாகூர் 1 ரன்களில் ஆட்டமிழக்க பின்னர் தான் ரோஹித் ஷாமா களமிறங்கி இந்த சுலபமான டார்கெட்டை வெறும் 22.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு வென்றனர். ஆனால் கடைசி வரையில் விராட் கோலி களமிறங்கவே இல்லை என்பது குறிப்பிடதக்கது.




