மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியாது பல தொடர் போட்டியில் விளையாடி வருகிறது.இடஙக சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே இந்தியா டெஸ்ட் போட்டியில் 1-0 என்ற கணக்கிலும் ஒருநாள் போட்டியில் 2-1 என்ற கணக்கிலும் வெற்றி பெற்ற நிலையில் இந்திய அணியானது தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் அற்புதமாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது இரண்டாவது போட்டியிலும் வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில் இரண்டாவது போட்டியானது இன்று பிராவிடன்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் 3வது போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில் அற்புதமாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி 55 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த கெய்ல் மேயர்ஸ் 25 (20) ரன்களில் அவுட்டானார்.
அடுத்து வந்த ஜான்சன் சார்லஸை 12 (14) ரங்களிலும் நிக்கோலஸ் பூரன் 20 (12) ரன்களிலும் ஆட்டமிழக்க மறுபுறம் நங்கூரமாக விளையாடிய 42 (42) ரன்களிலும் அவுட்டாகி திருப்பு முனையை ஏற்படுத்தினார். அதன் பின்னர் வந்த சிம்ரோன் ஹெட்மயர் 9 (8) ஆதமிழ்காக்க கேப்டன் ரோவ்மன் போவல் 1 பவுண்டரி 3 சிக்ஸரை பறக்க விட்டு 40* (19) ரன்கள் விளாசினார். இதனால் 20 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் 159/5 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா அணியின் தொடக்க வீரர் முதல் ஓவரிலேயே ஜெய்ஸ்வால் 1 (2) ரன்னில் அவுட்டாகி அறிமுகப் போட்டியில் ஏமாற்றம் அளிக்க அதன் பின்னர் நம்பிக்கை நட்சத்திரமாக வந்த சூரியகுமார் முதல் பந்திலேயே சிக்சரை பறக்க விட்டு வேட்டையை தொடங்கிய நிலையில் எதிர்புறம் திண்டாடிய சுப்மன் கில் 6 (11) ரன்னில் அவுட்டாகி மீண்டும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தார்.

ஆனால் மறுபுறம் தொடர்ந்து அசத்திய அதிரடியாக விளையாடிய சூரியகுமார் யாதவுக்கு இந்த தொடரில் ஆரம்பம் முதலே தனி ஒருவனாக போராடி வந்த திலக் வர்மா நிதானமாக விளையாடி கை கொடுத்தார். அந்த வகையில் 5வது ஓவரில் இணைந்த இந்த ஜோடி 13 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 3வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றி பாதைக்கு அழைத்து வந்த நிலையில் சதமடிப்பார் என்று பார்க்கப்பட்ட சூரியகுமார் யாதவ் 10 பவுண்டரி 4 சிக்சருடன் 83 (43) ரன்களில் ஆட்டமிழந்தார்.

இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய திலக் வர்மா எதிரணிக்கு வளைந்து கொடுக்காமல் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 49* (37) ரன்களும் கடைசியில் கேப்டன் பாண்டியா 20* (15) ரன்கள் எடுத்தல் இந்திய அணியானது 17.5 ஓவரிலேயே 164/3 ரன்களை எடுத்த 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் தொடர்ந்து முன்றது போட்டியில் தோல்வியை சந்தித்து விமர்சனங்களை உள்ளாகாமல் காம்பேக் கொடுத்துள்ளது இந்தியா.





