ஐபிஎல் 2023 தொடரில் இன்று நடந்த 16வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டன. இப்போட்டியானது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பௌலிங் போட முடிவு செய்தது. அது அவர்களுக்கு சரியான முடிவு தான் என்று பிறகு தான் அவர்களுக்கு தெரிந்தது

இந்நிலையில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் ப்ரித்வி ஷா 10 பந்துகளில் 15 ரன்களை மட்டுமே அடித்து ஹ்ரிதிக் சோக்கினிடம் விக்கெட்டை பறி கொடுத்து மீண்டும் டெல்லி அணிக்கு ஏமாற்றத்தை அளித்தார். அதற்கு பிறகு வந்தவர்களும் சரியாக ஆடாத நிலையில் டேவிட் வார்னர் மற்றும் அக்சர் பட்டேல் இருவரும் இணைந்து நல்ல பேட்டிங் செய்து அரை சதம் அடித்தார்கள். முடிவில் டெல்லி அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில் 173 என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினர். இருவரும் இணைந்து 36 பந்துகளில் 68 ரன்களை பூர்த்தி செய்தனர். இந்த நிலையில் இஷான் கிஷன் 26 பந்துகளில் 31 ரன்களை அடித்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் 50 ரன்களை கடந்தார். கடந்த 26 போட்டிக்கு பின் ,இந்த சீசனில் தான் அரை சதத்தை பதிவு செய்தார் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா ரோகித் சர்மாவுடன் இணைந்த அதிரடி ஆட்டக்காரரான திலக் வர்மாவும் இனைந்து டெல்லி அணியின் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தினர்.

திலக் வர்மா 4 சிக்சர்கள் மற்றும் 1 பவுண்டரியை அடித்திருந்த நிலையில் 41 ரன்களில் முகேஷ் குமாரிடம் விக்கெட்டை இழந்தார். அதன் பின் வந்த சூர்யகுமார் யாதவ் 0 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.இருப்பினும் இந்த போட்டியை மும்பை அணி வென்றது. போட்டியின் முக்கிய தருணமான அணியின் கேப்டன் ரோகித் சர்மா 45 பந்துகளில் 65 ரன்களை அடித்த நிலையில் மூஸ்தபிசூர் ரஹிம் வீசிய பந்தில் அபிஷேக்கிடம் கேட்சை கொடுத்து ஆட்டம் இழந்தார்.
இணையத்தில் பகிரப்படும் வீடியோ
டெல்லி அணியின் பந்து வீச்சாளரன முஸ்தபிசூர் ரஹீம் வீசிய பந்தனது ரோகித் சர்மாவின் பேட்டின் முனையில் பட்டு விக்கெட் கீப்பரான இளம் வீரர் அபிஷேக்கிடம் சென்றது.
— Ninja (@IPLcskMSD) April 12, 2023
அவர் அந்த பந்தை எம்.எஸ்.தோனி பிடிப்பதை போல் பாய்ந்து பந்தை பிடித்தார்.இந்த வீடியோவானது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.




