முதல் போட்டியில் சென்னை அணசென்னை அணி அகமதாபாத்தில் குஜராத் அணியை எதிர்கொண்டன .அதில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி 7 விக்கெட்கள் இழப்பிற்க்கு 179 ரன்கள் மட்டுமே எடுத்தது.சென்னை அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் ருதுராஜ் தவிர மற்ற யாரும் ஜொலிக்கவில்லை .ருதுராஜ் 50 பந்துகளில் 92 ரன்களை எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார் .அதன் பின் சென்னை ஆணியின் கேப்டன் தோனி ஒரு சில பவுண்டரிகள் அடித்தார்.அதன் பின் பேட்டிங்ஆடிய குஜராத் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .சென்னை அணி தோல்வி அடைந்தது .
லக்னோ அணியின் முதல் போட்டி :
லக்னோ அணி முதல் போட்டியை தனது சொந்த மைதானமான எக்னா மைதானத்தில் டெல்லி அணியை எதிர்கொண்டன .முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணி 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்களை குவித்தது .லக்னோ அணியின் கேப்டன் சொதபினாலும் மற்ற வீரரான மேயிர்ஸ் 38 பந்துகளில் 73 ரன்களை குவித்தார் அவர் பிறகு வந்த பூரான் 36 ரன்களை குவித்தனர் .அதன்பின் பேட்டிங் ஆடிய டெல்லி அணி லக்னோ அணியின் பௌலிங்யை சமாளிக்க முடியமால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்களை மட்டும் எடுத்தன .
இன்றைய போட்டியின் நிலவரம் :
சென்னை அணிக்கு அதிகம் எதிர்பார்த்த பென் ஸ்டோக்ஸிடம் இருந்து சிறப்பான ஆட்டம் இன்னும் வெளிவரவில்லை.அதே போல பேட்டிங்கிலும் கூட மற்ற வீரர்களிடம் இருந்து சிறப்பான ஆட்டம் எதிர்பார்க்கப்படுகிறது.சென்னை அணிக்கு அறுதல் செய்தி என்னவென்றால் 1426 நாட்களுக்கு சொந்த மைதானத்தில் லக்னோ அணியை எதிர்கொள்கிறது .அதே போல் லக்னோ அணியின் கேப்டனாக இருக்கும் கே எல் ராகுலிடம் இருந்து ரன்கள் வர வேண்டும் என்று ரசிகர்கள் எண்ணுகிறார்கள்.

வெற்றி கணிப்பு :
கடந்த போட்டியில் சென்னை அணி சொதப்பி இருந்தாலும் இன்று நடக்க விருக்கும் போட்டியில் சென்னை அணிக்கு சொந்த மைதானம் என்பது ஒரு நன்மை உள்ளது.அதே போல் இது வரைக்கும் நடந்த அனைத்து போட்டிகளிலும் சொந்த மைதானத்தின் அணியே வெற்றி பெற்றதுள்ளது.கடந்த வருடம் சென்னை மற்றும் லக்னோ அணி எதிர்கொண்டதில் லக்னோ அணி வெற்றி பெற்றது.ஆனாலும் இந்த முறை சென்னை அணிக்கு தான் வெற்றி வாய்ப்பு உள்ளது.

அதிலும் பல ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய சொந்த மண்ணில் விளையாட இருப்பதினால் ரசிகர்கள் மத்தியில் ஆவல் இயமத்தை தொட்டுள்ளது. முக்கியமாக எம்.எஸ்.தோனி விளையாடுவதை காணவே ரசிகர்கள் முண்டியடித்து கொண்டு சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்துள்ளனர். இந்த சீசனில் தங்களுடைய சொந்த மைதானத்தில் விளையாடிய அணிகள் அனைத்துமே அவர்களுடைய ரசிகர்களுக்கு வெற்றி கனியை கொடுத்த நிலையில் சென்னை அணியும் அப்படி கொடுக்குமா என்பது இன்னனும் சில மணிநேரங்களில் தெரிந்துவிடும்.





