ஆண்டு தோறும் நடைபெற்று ஐபிஎல் போட்டியானது சில வாரங்களுக்கு முன் கோலாகலமாக தொடங்கியது.அதில் அனைத்து அணிகளும் வெற்றியை அடைய வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது.அதில் சில அணிகள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.இந்த நிலையில் தான் சென்னை அணியின் வீரரான ரஹானே பற்றி சேவாக் கூறியது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது2011-ம் ஆண்டு இந்திய அணியில் பேட்ஸ்மேனாக அறிமுகமானார். அதன் பின் சிறப்பாக விளையாடி வந்தார் ரஹானே.

இவர் விராட் கோலிக்கு முன்னதாகவே இந்திய அணியில் சில போட்டிகளில் துணை கேப்டன் மற்றும் கேப்டனாக இருந்து வந்தார்.ரஹானே 11 போட்டிகளில் கேப்டனாக இருந்து வந்தார் அந்த 08 போட்டிகளிலும் வெற்றியை பதிவு செய்தார் ரஹானே.அதன் பின் சரிவர விளையாட காரணத்தாலும், ஸ்டரைக் ரேட் குறைந்த காரணத்தாலும் கேப்டன் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.அதற்க்கு பிறகும் இந்திய அணியில் இருந்தும் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.
ஐபிஎல்லில் ரஹானே
2007-ம் ஆண்டு ஐபிஎல்லில் மும்பை அணிக்காக விளையாடி வந்தார். அதன் பின் 2018-ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். அந்த ஆண்டு 15 போட்டிகளில் கேப்டனாக இருந்த ரஹானே 08 போட்டிகளில் மட்டும் வெற்றியை பதிவு செய்தார். அதன் பிறகு 2019-ம் ஆண்டு 09 போட்டிகளில் மட்டுமே கேப்டனாக இருந்த ரஹானே அந்த சீசனில் 02 போட்டிகளில் மட்டுமே வெற்றியை ராஜஸ்தான் அணிக்கு தேடித்தந்தார். 2023 க்கான ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி ரஹானேவை 50 லட்சதிற்கு ஏலத்தில் எடுத்தது.

ரஹானேவின் முதல் போட்டி
முதல் போட்டியில் சென்னை அணியின் பேட்டிங் வரிசையில் அவருக்கு வாய்ப்பு வழங்க படவில்லை. முதல் போட்டியில் சென்னை அணி தோல்வியை தழுவியது. இரண்டாவது மும்பை அணிக்கு எதிரான போட்டியில் வெற்றியடைந்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை குவித்தனர். இரண்டாவதாக களம் கண்ட சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி 18.1 ஓவர்களிலே 3 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை அடித்து வெற்றி பெற்றது.அந்த போட்டியில் சிறப்பாக ஆடிய ரஹானே 27 பந்துகளில் 61 ரன்களை அடித்த நிலையில் சாவ்லாவிடம் விக்கெட்டை இழந்தார். சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வெற்றி பெற இவர் முதுகெலும்பாக இருந்தார்.
போட்டிக்குபின் பேசிய ரஹானே
ரஹானே கூறியது “நான் இந்த அளவிற்கு சிறப்பாக விளையாட தோனி தான் காரணம். சென்னை அணி நிர்வாகம் மற்றும் தோனி எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார்”அதுவே நான் சிறப்பாக விளையாட காரணம். தோனி கூறுகையில் ரஹானேவின் பேட்டிங் பார்பதற்க்கு மகிழ்ச்சியாக இருந்தது.

தோனியை பற்றி கூறிய சேவாக்
“இந்திய அணிக்காக ரஹானேவை தேர்வு செய்யும் போது தோனி தான் அவர் வேண்டாம் என்றார். அவரால் சிறந்த ஸ்டரைக் ரேட்டில் விளையட முடியவில்லை என்றார்”. அனால் இப்பொழுது சென்னை அணியில் சேர்த்துள்ளார்.“ சென்னை அணிக்கு அனுபவம் வாய்ந்த வீரர் சென்னை அணியில் வேண்டும் என்று ரஹானேவை தோனி தான் அணிக்கு எடுத்தார்” என சேவாக் கூறிய கருத்து தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.





