உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக தொடங்கி பெற்று வருகிறது. அதில் நேற்று 39வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுல் முதலில் பந்துவீச்சை அவர் தேர்வு செய்தார்.

அது அவருக்கு முதல் சில ஓவர்களில் மட்டுமே தான் கை கொடுத்தது. பவர் ப்ளே ஓவர் முடிவதற்குள் சென்னை அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி விளையாடி இருந்தது. ஆனால் அதன் பின் சிக்சர் துபே மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் சிறப்பான பேட்டிங் மூலம் லக்னோம் அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்து இருந்தனர். சென்னை அணி 20 அணி இருபது ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 210 ரன்களை சென்னை அணி குவித்து இருந்தது.
லக்னோ அணி ஆரம்பத்தில் பவர் ப்ளே முடிவுக்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்து இருந்தாலும் அதன் பின் வந்த மார்கஸ் ஸ்டோனிஸ் தனி ஒரு மனிதராக போராடி 63 பந்துகளில் 124 ரன்களை அவர் அடித்துசென்னை அணியை அதன் சொந்த மைதானத்தில் வைத்தே 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். இந்நிலையில் தான் சிறப்பாக விளையாடிய மார்கஸ் ஸ்டோனிஸ் குறித்து பேசியுள்ளார் முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா.

அவர் கூறுகையில் : லக்னோ அணி விளையாட தொடங்கிய போது தீபக் சாஹர் முதல் ஓவரிலேயே குயின்டன் டி காக்கை அவுட் செய்தார். பின்னர் கேஎல் ராகுல் பந்துவீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் பந்தில் அவுட் ஆனபோது. மூன்றவது இடத்தில் யார் களமிறங்குவார்கள் என்று தோன்றியது. ஏனெற்றால் 3-வது இடத்தில் நான்கு வித்தியாசமான பேட்டர்களை முயற்சித்துள்ளது. அவர்கள் இந்த முறை மார்கஸ் ஸ்டோனிஸை அனுப்பினார்கள்.
அது சாத்தியமற்றது என்று தோன்றியது. ஆனால் அவர் சாத்தியமற்றதை சாத்தியமாக்கினார். மார்கஸ் ஸ்டோனிஸ் பாராட்டத்தக்க வகையில் பேட்டிங் செய்தார். டிரைவிங்கை விட, அவரது நிலையில் நின்று கொண்டு அவர் காட்டிய பவர். பந்து வீச்சாளர்களுக்கு அவர் என்ன செய்ய முயற்சிக்கிறார் என்ற யோசனை கூட வரவில்லை.
நீங்கள் இதை கவனித்தீர்கள் என்றார் அனைத்து ஆஸ்திரேலியர்களும் ஃபார்முக்கு முன் வருகிறார்கள். உலகக் கோப்பை க்ளென் மேக்ஸ்வெல் பெங்களூரு அணிக்காக ரன் குவிக்கவில்லை, ஆனால் அவரிடம் அடிக்கின்றன திறமை உள்ளது என்றார் ஆகாஷ் சோப்ரா. இவர் கூறியது போலவே ஹைதராபாத் அணியில் ட்ராவ்ஸ் ஹெட், லக்னோ அணியில் மார்கஸ் ஸ்டோனிஸ் என பல ஆஸ்திரேலிய வீரர்கள் உலக கோப்பைக்கும் தயாராக ஐபிஎல் தொடரை பயிற்சி என எடுத்துக்கொண்டது போல தெரிகிறது.





