உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக தொடங்கி பெற்று வருகிறது. அதில் நேற்று 41 போட்டியில் ஹைதராபாத் அணியும் பெங்களூரு அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் மைதானத்தில் மோதி இருந்தது.இந்த இரு அணிகளும் மோதிய கடந்த போட்டியில் ஹைதராபாத் அணி தங்களது அசுர தனமான பேட்டிங்கால் பெங்களூரு அணியை வீழ்த்தி இருந்தனர்.

ஆனால் நேற்றைய போட்டி அதற்கு மாற்றக்கவே அமைந்தது இன்றைய போட்டி அமைந்தது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் து பிளசிஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி ஆரம்பத்தில் இருந்தே தங்களது அதிரடியை காட்ட தொடங்கினார்கள்.ஆனால் இடையில் விக்கெட்டுகளை இழந்து வர படித்தார் தனது சிறப்பான பேட்டிங்கால் அணிக்கு வேகமாக ரன்களை அவர் குவித்து வந்தார்
20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களை அடித்து இருந்தது. அதில் அதிக பட்சமாக விராட் கோலி 51 ரன்களும் படித்தார் 50 ரன்களும் கிரீன் 37 ரன்களும் அடித்து அணிக்கு ரன்களை குவித்து வந்தனர்.இடையில் மிடில் ஆர்டர்கள் விக்கெட்டுகளை இழந்து வந்த நிலையில் ரஜத் படித்தார் 20 பந்துகளில் 50ரன்களை அவர் அடித்து இருந்தார். அதில் அவர் 5 சிக்சர்களும் 3 பவுண்டரிகளையும் அவர் அடித்து இருந்தார்.

இந்நிலையில் இந்த போட்டியில் மோசமாக விளையாடிய விராட் கோலி குறித்து சோசியல் மீடியாவில் ட்ரோல்ல்களும் விமர்சனங்களும் நேற்று இரவு பறந்தன . சொல்லப்போனால் விராட் இன்னிங்க்கின் நூற்றில் 40 பங்கு பந்துகளை எதிர்கொண்டு 51 ரன்களை மட்டுமே நடித்திருந்தார். இந்நிலையில் தான் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச் விராட் கோலியின் இந்த விளையாட்டு அணுகுமுறை குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது :இங்கே சில விஷயங்களின் கலவை என்று நினைக்கிறேன். ஆனால் பவர்பிளேக்குப் பிறகு, அவர் 25ல் இருந்து 19க்கு சரிந்தார். ஆனால் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் மறுமுனையில் படிதார் அற்புதமாக விளையாடி கொண்டிருந்தார். சில நேரங்களில் ஒரு செட் பேட்டராக உங்கள் வேலை விளையாட்டை கொஞ்சம் ஆழமாக எடுத்து முடிந்தவரை படிதாரை பேட்டிங் செய்ய வைப்பதுதான். அங்குதான் பவுடரி அடிக்க வேண்டும் என்ற எண்ணம் போகிறது.

நீங்கள் விராட் கோலியின் விளையாட்டை தனித்து பார்ப்பதால் அவர் மெதுவாக விளையாடி இருக்கிறார் என்று சொல்லலாம். ஆனால் ஒரு பாட்னர்ஷிப்பாக பார்த்தால் அவர் மிகவும் சரியாக விளையாடி இருக்கிறார். ஸ்ட்ரைக் தேவைப்படும் இடத்தில் படித்தருக்கு முடிந்த அளவிற்கு ஸ்ட்ரைக் கொடுத்து விளையாட வைத்திருக்கிறார். அந்த இடத்தில் விராட் மிகவும் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார் என்றார் பிண்ட்ச்.





