ஐபிஎல் திருவிழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஆனால் சென்னை அணிக்கு போராட்டம் என்பது இன்னனும் திறந்தபாடில்லை. ஏற்கனவே பென் ஸ்டோக்ஸை அடுத்து தீபக் சாஹர் உள்ளிட்டோருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அணியின் முக்கிய வீரரான மகேந்திர சிங் தோனிக்கு காயம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. முழங்கால் காயத்தில் இருந்து மீண்டு வர தோனி தன்னால் முடிந்த அளவு முயற்சி செய்து வருவதாக சென்னை அணியின் பயிற்சியாளர் கூட தெளிவாக கூறியுள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில், வரும் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி காயம் அடைந்தால் சென்னை அணியின் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் தான். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 2 மூத்த வீரர்கள் வரும் போட்டிகளில் அணிக்கு கேப்டனாக இருக்க முடியும் என்று சோசியல் மீடியாவில் சரி கிரிக்கெட் வல்லுனர்களும் சரி பேசிக்கொள்கின்றனர்.
ருதுராஜ் கெய்க்வாட் :
தற்போது உள்ள சென்னை அணியை பொறுத்தவரையில் தோனி அணியில் இல்லாத சமயத்தில் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக்கலாம். சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான உள்நாட்டுப் போட்டியிலும் மகாராஷ்டிர அணிக்கு கெய்க்வாட் கேப்டனாக இருந்துள்ளார். அவருக்கும் கேப்டன் பதவியில் அனுபவம் உள்ளது. அதோடு வயதும் குறைவு தான் அத்தகைய சூழ்நிலையில் அணியின் எதிர்காலத்திற்கான கேப்டனாக தான் தகுதியானவன் என்பதை நிரூபிக்க முடியும்.

ரிதுராஜ் கெய்க்வாட் 2020 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல்லில் அறிமுகமானார். ரிதுராஜ் கெய்க்வாட் இதுவரை 40 ஐபிஎல் போட்டிகளில் 40.11 சராசரி மற்றும் 133.33 ஸ்ட்ரைக் ரேட்டில் 1404 ரன்கள் எடுத்துள்ளார். இதன் போது ரிதுராஜ் கெய்க்வாட் 1 சதம் மற்றும் 12 அரை சதங்கள் விளாசப்பட்டுள்ளன.
ரவீந்திர ஜடேஜா :
சென்னை அணி கடந்த சீசனில் தோனிக்குப் பதிலாக ரவீந்திர ஜடேஜாவிடம் அணியின் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்தது. இதுபோன்ற சூழ்நிலையில், வரும் போட்டிகளில் தோனி அணியில் இடம் பெறவில்லை என்றால், அவருக்கு பதிலாக ஜடேஜா சிறந்த கேப்டன் என்பதை நிரூபிக்க முடியும். ஐபிஎல்-ல் ஜடேஜாவின் கேப்டன்சி சாதனை சரியில்லை என்றாலும், சிஎஸ்கேவைப் பொறுத்தவரை ஜடேஜா நீண்ட காலமாக அணியுடன் இணைந்த அனுபவம் வாய்ந்த வீரர்.

ஜடேஜா இதுவரை 214 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 2531 ரன்கள் எடுத்துள்ளார். இதன் போது ரவீந்திர ஜடேஜா 2 அரை சதங்கள் விளாசப்பட்டுள்ளன. ஐபிஎல் தொடரில் 138 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் ஜடேஜா. சிறந்த பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் நிபுணத்துவம் பெற்ற ரவீந்திர ஜடேஜா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாவதற்கு முழுவதும் தகுதியான நபர் என்றே கூறலாம்.




