ஐபிஎல் 2023ல் 25வது லீக் ஆட்டம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் ஐபிஎல் தொடரில் பலம் வாய்ந்த இரு அணிகள் மோதுகின்றன. மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் எய்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 192 ரன்கள் குவித்தது.

193 ரன்களை எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய சன்ரைசஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ப்ரூக் 9 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து வெளியேறினார். சன்ரைசஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் ரன்களை எடுக்க கஷ்டப்பட்டு வந்தனர். ராகுல் த்ரிப்பாட்டியும் 7 ரன்களிலே வெளியேறினார். சன்ரைசஸ் அணியின் வீரர்கள் மும்பை அணியின் பௌலிங்கை சமாளிக்க கஷ்டப்பட்டு வந்தனர்.
அதன் பின்னர் வந்த அணியின் கேப்டன் ஒரு சில பவுண்டரிகளை அடித்து அணிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினார். ஆனால் அவராலும் ஜொலிக்க முடியாமல் விக்கெட்டை இழந்து வெளியேறினார். இந்நிலையில் ஹைதராபாத்ற்கு எதிராக கடைசி ஓவரை வீச வந்த அர்ஜுன் டெண்டுல்கர் ஹைதராபாத்தை 178 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார். ஐபிஎல் தொடரின் முதல் விக்கெட்டையும் கைப்பற்றினார். அவரது முதல் ஐபிஎல் போட்டிகளின் பலி புவனேஷ்வர் குமார்.

இந்த கடைசி ஓவரில் அர்ஜுன் அற்புதமாக பந்து வீசினார். கடைசி ஓவரில் 4 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். அதே சமயம் போட்டி முழுவதும் 2.5 ஓவர்கள் வீசி 18 ரன்களுக்கு 1 விக்கெட்டை வீழ்த்தினார். இந்நிலையில் அணைத்து விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணி 19.5 ஓவர்கள் முடிவில் 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. என்னதான் தோல்வியடைந்திருந்தாலும் ஹைதராபாத் அணி தங்களால் முடிந்த்ததை செய்தார்கள்.
Did You Watch – Two stupendous catches by the #SRH Skipper @AidzMarkram ends Ishan Kishan and Suryakumar Yadav's stay out there in the middle.#SRHvMI pic.twitter.com/a1sGNjV6r1
— IndianPremierLeague (@IPL) April 18, 2023
அந்த வகையில் நேற்றைய போட்டியில் நஇஷான் கிஷன், மார்கோ ஜான்சனின் பந்துவீச்சில் ஒரு பெரிய ஷாட்டை ஆட முயன்றார், ஆனால் ஹைதராபாத் அணியின் கேப்டன் மார்க்ரம் ஓடும் போதே பந்தை பிடித்தார். இதையடுத்து பேட்டிங் செய்ய வந்த சூர்யகுமார் யாதவ் ஜான்சன் பந்தில் சிக்சர் அடித்தார். இதன்பிறகு அடுத்த பந்தில் அடிக்க முயற்சி செய்த போது 30 யார்டு வட்டத்தில் நின்றிருந்த எய்டன் மார்க்ரம், காற்றில் பறந்த பந்தை பிடித்து சூர்யாவை பெவிலியனுக்கு அனுப்பினார். எய்டன் மார்க்ரமின் இந்த அபாரமான பீல்டிங் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





