ஐபிஎல் 2023 தொடரில் நேற்று நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே போட்டி நடந்தது. இந்த போட்டியில் ஆர்சிபி பதிவு செய்த்தது. இதில் முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச முடிவு செய்தது. அதன் படி களமிறங்கிய ஹைதராபாத்திற்கு சரியான தொடக்கம் இல்லை. சொல்லப்போனால் முதல் மூன்று ஓவர்களில் 11 ரன்களை மட்டுமே எடுத்து ஹைதராபாத்.

ஒரு கட்டத்தில் ஹைதரபாத் 150 தண்டுவார்களா என்றிருந்த நிலையில் அதிரடியாக ஆடிய கிளாசனின் பேட்டிங்கினால் 150 ரன்களை தொட்டது ஹைதராபாத். மேலும் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கிளாசன் 49 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களின் முலம் தன்னுடைய முதல் ஐபிஎல் சதத்தை அடித்தார் கிளாசன். ஆனால் சதம் அடித்த அந்த ஓவரிலேயே கிளாசன் 51 பந்துகளை 104 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். இறுதியில் ஹைதராபாத் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்களை எடுத்தது ஹைதராபாத் அணி.
187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய ஆர்சிபியின் தொடக்க ஜோடியான விராட் கோலி மற்றும் டு பிளேசிஸ் சிறப்பாக விளையாடினார்கள். மேலும் ஃபாஃப் டு பிளிசிஸ் 71 ரன்கள் எடுத்து ஹைதராபாத் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அபாரமாக பேட்டிங் கோலி 63 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து தனது வாழ்க்கையில் 76வது சதத்தை பதிவு செய்தார் விராட் கோலி. இறுதியில் ஆர்சிபி 8 விக்கெட்டுகள் விதியசத்தில் வெற்றி பெற்றது. மேலும் புள்ளி பட்டியலிலும் மும்பையை கீழே தள்ளி 4வது இடத்திற்கு வந்தது.

மார்க்ரம் கொடுத்த பேட்டி :
இந்நிலையில் போட்டிக்கு பிறகு பேசிய ஹைதராபாத அணியின் கேப்டன் மார்க்ரம் கூறுகையில் “நாங்கள் நன்றாக பேட் செய்தோம். பவர்பிளேவை சரியாக பயன்படுத்தி இன்னும் சில ரன்கள் எடுத்திருக்கலாம். ஆனாலும் நல்ல ஸ்கோர்தான். ரசிகர்கள் நல்ல ஆதரவு எங்களுக்கு மட்டுமல்லாமல் ஆர்சிபிக்கும் கொடுத்தார்கள். நாங்கள் வெற்றி பெற வந்தோம் ஆனால் அது நடக்கவில்லை. எங்களின் கடைசி போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் இந்த பிரச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வருவோம் என்றார் மார்க்கம்.

மேலும் பேசிய வர ஃபாஃப் டு பிளெசிஸ் மற்றும் விராட் கோலி சிறப்பான இன்னிங்ஸ் விளையாடினர். சில இளம் வீரர்களை நாங்கள் கண்காணித்து வருகிறோம். கிளாசென் இந்த போட்டியில் சிறப்பான கிரிக்கெட்டை விளையாடினார், அவரை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் சதம் அடித்த போதிலும் நாங்கள் தோற்றது எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது என்றார் ஏய்டன் மார்க்ரம்.





