ரஹானே கடந்த ஐபிஎல் போட்டியில் மிகசிறப்பாக செயல்பட்டு பல முக்கியமான போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற உதவினார். மேலும் அதற்கு முன்னர் நடந்த உள்ளூர் போட்டிகளிலும் அவரது விளையாட்டு மிகவும் அற்புதமாக இருந்தது. அதனை தொடர்ந்து தான் ரஹானே மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டு வரும் வெஸ்ட் இண்டீஸ் போட்டிக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் இவர் துணிகேப்டனாகியது குறித்து பலரும் விமர்சனங்களை எழுப்பி வந்தனர்.

விமர்சனங்களுக்கு பதிலடி :
இந்நிலையில் தனக்கு வயசாகிவிட்டது என்ற விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த ரஹானே கூறுகையில் “எனக்கு என்ன அப்படி வயதாகிவிட்டது. நான் இன்னமும் இளம் வீரராக இருப்பதை போலத்தான் உணர்கிறேன். என்னுள் நிறைய கிரிக்கெட் உள்ளது. கடந்த ஒரு வருடத்தில் எனது உடற்தகுதிக்காக நான் நிறைய உழைத்தேன். பேட்டிங்கிலும் நான் அதிக பயிற்சி செய்தேன். நான் எனது கிரிக்கெட்டை மிகவும் ரசிக்கிறேன், எனது பேட்டிங்கை ரசிக்கிறேன்.
எதிர்காலத்தைப் பற்றி நான் அதிகம் சிந்திக்கவில்லை. ஒவ்வொரு ஆட்டமும் தனிப்பட்ட முறையில் முக்கியமானது. ஒரு அணியின் வீரராகவும் நான் கவனம் செலுத்த சில முடிவுகளை எடுக்கிறேன். ஐபிஎல் போட்டியில் நான் மற்ற அணிகளுக்காக விளையாடும் போது எனக்கு விழுகின்றன விக்கெட்டுகளை தடுத்து நிறுத்தும் ஒரு ஆங்கர் வீரராகத்தான் எனக்கு வாய்ப்பு கொடுத்தார்கள். ஆனால் சிஎஸ்கேவில் விளையாடும் போது என்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுத்தார்கள்.

அதனால் என்னால் அணிக்காக சிறப்பாக செயல்பட முடிந்தது. ரோஹித் சாரமா எனக்கு கொடுத்த ரோலும் அப்படிதான். ரோஹித் ஷர்மாவின் தலைமையில் விளையாடுவது அற்புதமான உணர்வை தருகிறது. அவர் வீரர்களுக்கு சுதந்திரம் கொடுக்கிறார், அது ஒரு சிறந்த கேப்டனுக்கான அழகு என்று நன் நினைக்கிறேன். நான் ஏற்கனவே 5 ஆண்டுகளாக துணை கேப்டனாக பொறுப்பில் இருந்திருக்கிறேன், எனவே எனக்கு வழக்கமான ஒரு வேலை தான். இப்போது மீண்டும் அணியில் இணைத்து துணைக்கேப்டனாகி இருப்பது மகிழ்ச்சியாகிறது என்றார் ரஹானே.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் :
மேலும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பற்றி பேசிய அவர் கூறுகையில் “ஜெய்ஸ்வால் ஒரு அற்புதமான திறமைசாலி. உள்ளூர் போட்டியில் மும்பைக்காகவும் ஐபிஎல்லில் சிறப்பாகச் செயல்பட்டார். சிவப்பு-பந்து கிரிக்கெட்டில் அவர் பேட்டிங் செய்யும் விதம் மிக முக்கியமானது. என்னுடைய அறிவுரை அவருக்கு என்னவென்றால். அவர் அங்கு சென்று சுதந்திரமாக பேட்டிங் செய்யும் விதத்தை வெளிப்படுத்த வேண்டும், மேலும் சர்வதேச கிரிக்கெட்டைப் பற்றி அதிகம் சிந்திக்க வேண்டாம் என்றார் ரஹானே.

பந்துவீச்சாளர்கள் பற்றி ரஹானே :
இந்த தொடரை பொறுத்தவரில் சிராஜ் ஒரு மூத்த பந்துவீச்சாளராக இருக்கிறார், ஜெய்தேவுக்கு நிறைய அனுபவம் உள்ளது. ஷர்துல் தாக்கூர் மற்றும் நவ்தீப் சைனி மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள். எனவே இது அவர்களுக்கு தங்களுடைய திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு. முகமது ஷமி எங்களின் மூத்த பந்துவீச்சாளர், அவர் எங்களுக்காக உண்மையிலேயே சிறப்பாகச் செயல்பட்டார். ஆனால் அவர் பல போட்டிகளாக தொடர்ந்து விளையாடி வருகிறார். எனவே அவருக்கு ஓய்வு என்பது கட்டாயம்.
அதே சமயம் வெஸ்ட் இண்டீசை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. வெளியில் மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். ஆனால் நாங்கள் அவற்றை எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம். கடந்த ஓரிரு வருடங்களாக சொந்த மண்ணில் அவர்களது ஆட்டம் டெஸ்டில் சிறப்பாக உள்ளது. நாங்களும் பார்படாஸில் வருவதற்கு முன்பு நாங்கள் நன்றாகத் தயாராகிவிட்டோம். எனவே இது நன்றாக தொடங்க வேண்டிய நேரம் என்றார் ரஹானே.





