சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இந்த வருடம் தன்னுடைய 5வது ஐபிஎல் கோப்பையை வென்றது. மேலும் தோனி அடுத்த ஆண்டு விளையாடுவதாக கூறினாலும் அதற்கு பிறகு சென்னை அணியை யார் வழிநடத்துவார் என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது. சிலர் ஜடேஜா வழிநடுத்துவர் என்று கூறினாலும் ஜடேஜாவுக்கும் தோனிக்கு பிரச்னை இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இறுதி போட்டியில் வெற்றி பெற்றவுடன் தோனியும் ஜடேஜாவும் நடந்து கொண்ட விதம் இவர்களுக்கு இடையே எப்படி பிரச்னை வரும் என்று ரசிகர்கள் நிம்பதி பெருமூச்சு விட்டனர்.

இருந்த போதிலும் சென்னை அணிக்கு ஜடேஜா கேப்டனாக இருந்த போது பல விதமான பிரச்சனைகளை எதிகொண்டார். ஆவர் 2022 வழிநடத்தும் போது சென்னை அணியாது மிகவும் மோசமான தோல்வியை தழுவியத்தினால் பெருதும் ஏமாற்றம் அடைந்தார் ஜடேஜா. இப்படிபட்ட நிலையில் தான் சென்னை அணியில் இருந்து ஓய்வு பெற்ற அம்பதி ராயுடு CSK அணிக்கு அடுத்த கேப்டன் யாராக இருக்க முடியும் எனபது குறித்து யூடியூப் சேனலுக்கு கொடுத்த பெட்டியில் கூறியுள்ளார்.
இந்நிலையில் அந்த பேட்டியில் சம்பாதி ராயுடுவிடம் தோனி மற்றும் ஜடேஜாவுக்கு இடையே இருக்கும் உறவு குறித்தும், அடுத்த வருடம் தோனி கேப்டனாக இருப்பாரா? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அம்பதி ராயுடு ஜடேஜா ஓன்று தோனியிடம் கோபித்து கொள்ள வில்லை. அந்த காரணமாக இருக்காது என்று நன் நினைக்கிறேன். ஜடேஜா சோகமாக இருந்தது அணி திறமையாக செயல்பட வில்லை என்றுதான். ஏனென்றால் அந்த வருடன் அனைவரது விளையாடும் சரியாக இல்லை. எனவே அந்த விஷியத்தினால் ஜடேஜா வருத்தமடைந்தார்.

எனவே தான் அதில் இருந்து கொஞ்சம் மனதை மாற்றுவதற்காக இடைவெளி எடுத்து கொண்டார். அதில் எந்த விதமான விரச்சனையும் கிடையாது அதி ஊடகங்களில் சித்தரிப்பு. இந்த வருடம் கூட சொல்லலாம். அவர் எனக்கு மிகவும் நெருக்கமானவர், சென்னை அணியில் நல்ல பிணைப்பு ஏற்பட்டிருக்கிறது. அந்த பிணைப்பு எப்போதுமே தொடரும். ஆனால் அடுத்த சீசனில் யார் கேப்டனாக இருப்பார் என்று எனக்கு தெரியவில்லை.
ஆனால் தோனி கேப்டனாக இருப்பர் என்று நான் நினைக்கிறேன். எதிர்கால அணியை பார்க்கும் போது ருதுராஜ் கேப்டனாக சிறந்த வாய்ப்பு அவருக்கு இருக்கிறது. தோனி அவரை வளர்த்தார், பல விஷியங்களை சொல்லியும் கொடுத்திருக்கிறார். தோனி மற்றும் பயிற்சியாளர் பிளமிங் போன்ற நல்ல கைகளில் ருத்துராஜ் இருக்கிறார். அவர் அணியின் நிர்வாகம் குறித்து நன்றாக தெரிந்தும் புரிந்தும் வைத்திருக்கிறார்.

அதோடு அவர் நல்ல அமைதியான ஒருவர் மட்டுமல்லாமல் மிகவும் திறமைசாலியான ஒருவர். இந்திய அணி இவரை சரியாக பயன்படுத்தும் என்று நான் நம்புகிறேன். ருத்துராஜ் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அவர் விளையாட வேண்டும் என்று நான் ஆனால் அவர்கள் அந்த மாதிரியான சூழ்நிலையில் தற்போது இல்லை என்று நினைப்பதாக கூறினார் அம்பதி ராயுடு. மேலும் தற்போது தோனி வழிந்ததினாலும் சென்னை அணியை ருத்துராஜ் வழிநடத்தவே வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறினார்.





