உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது சமீபத்தில் நடக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நடப்பு சாம்பியனான சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல தடுமாறி வருகிறது. இந்நிலையில் கடந்த போட்டிக்கு முன்னதாக நடந்த போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதியது. இதில் என்றும் இல்லாமல் டாஸை வென்ற ருதுராஜ் கெய்க்குவாட் பந்துவீச்சை முடிவு செய்தார். இந்நிலையில் இது அவர்களுக்கு பாதகாமாக சென்றது.

இந்நிலையில் இந்த போட்டியில் அற்புதமாக விளையாடிய குஜராத் அணி 231 ரன்கள் எடுக்க சென்னை அணி 198 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. என்னதான் எம்.எஸ் தோனி கடைசி நேரத்தில் வந்து சில சிக்ஸர்களை பறக்க விட்டாலும் அது சென்னை அணி வெற்றியடைய போதுமானதாக இல்லை. இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் சென்னை அணி ராஜஸ்தான் அணியை வீழ்த்தி புள்ளிபட்டியலில் மூன்றாவது இடத்திற்கு சென்றது.
இதனை தொடர்ந்து சென்னை அணியின் நிர்வாகம் மட்டும் அணி ரசிகர்களுக்கு பரிசுகளை வாங்கினார்கள். தோனியின் இந்த விழாவில் கலந்து கொண்டு ரசிகர்களுக்கு பந்துகளையும், டி ஷர்டுகளையும் பரிசாக வழங்கினார். இந்நிலையில் கிட்டத்தட்ட்ட சென்னை மைதானத்தில் தோனியின் கடைசி போட்டி இதுவாகத்தான் இருக்கும் என்ற நிலையில் சென்னை அணி ராஜஸ்தான் அணியை வீழ்த்தி பிளே ஆஃப் செலவதற்க்கான நம்பிக்கையை கொடுத்தது.

இதனால் ரசிகர்கள் பலரும் தோனியை மீண்டும் சென்னை மைதானத்தில் விளையாடுவதை பார்ப்போம் என்று நம்பிக்கையில் இறுகின்றனர். இருந்த போதிலும் அவர் மீண்டும் சென்னையின் விளையாடுவாரா என்று பிளே ஆஃப் போன பிறகுதான் தெரியவரும். அதற்கு அடுத்து வரும் போட்டியில் சென்னை கண்டிப்பாக அதிக நெட் ரன் ரேட்டுடன் வெற்றி பெற்ற வேண்டியது அவசியம். இந்நிலையில் தான் தோனி குறித்து முன்னாள் சென்னை அணியின் வீரர் அம்பதி ராயுடு பேசியது தற்போது வைரலாகி வருகிறது.

அவர் கூறியதாவது : தோனி சென்னையின் கடவுள். வரும் ஆண்டுகளில் எம்எஸ் தோனியின் கோயில்கள் சென்னையில் கட்டப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். தோனி இரண்டு உலகக் கோப்பைகளின் மகிழ்ச்சியை இந்தியாவுக்குக் கொண்டு வந்தவர், மேலும் பல ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் பட்டங்களுடன் சென்னைக்கு வாங்கி கொடுத்து சென்னை மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டு வந்தவர்.
அணிக்காகவும், நாட்டிற்காகவும், சிஎஸ்கேக்காகவும் எப்போதும் தனது வீரர்கள் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒரு வீரராக தோனி இருந்துள்ளார். அவர் ஒரு புராணக்கதை மற்றும் கூட்டத்தில் உள்ள எல்லோரும் கொண்டாடும் ஒருவராக தோனி இருக்கிறார். சென்னையில் இதுவே அவரது கடைசி ஆட்டமாக இருக்கலாம் என்று ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம் என்றார் அம்பதி ராயுடு.





