உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று 34வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில் பலப்பரிட்சை செய்தது.லக்னோ அணி இதற்க்கு முன்னதாக ராஜஸ்தான் அணியிடம் ஒரு தோல்வியை தழுவி இருந்தது. மற்று ஒரு பக்கம் சென்னை அணி மும்பை அணியிடம் வெற்றி பெற்று இந்த போட்டியில் மோதின.

இதில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் படி பேட்டிங் செய்த சென்னை அணி ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி விளையாடி வந்தது. ஆரம்பத்தில் லக்னோ அணியின் அதிகம் தான் அதிக அளவில் இருந்தது என்று சொல்லலாம். சென்னை அணியின் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழித்து தடுமாற மற்று ஒரு பக்கம் ஜடேஜா நிதானமாக விளையாடி அவரது அசரி சதத்தை பூர்த்தி செய்தார்.
பின்னர் வந்த தோனி சிக்ஸர்களை விலாச சென்னை அணி 176 ரன்களை எடுத்திருந்த போதிலும் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் தன்னுடைய திறமையை காட்டியவர் ஜடேஜா. இந்நிலையில் தான் முன்னாள் சென்னை அணியின் வீரரான அம்பதி ராயுடு ஜடேஜா குறித்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில் :சவாலான சூழ்நிலைகளில் இருந்து சென்னை அணியை எப்போதும் காப்பாற்றும் ஒரே சிஎஸ்கே கிரிக்கெட் வீரர் ஜடேயா தான். அவரது பேட்டிங் வரிசையை மாற்றினால், அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வார். லக்னோவுக்கு எதிராக அவர் விளையாடிய விதம் அபாரமானது. அணி சிக்கலில் இருந்தபோது அவர் பேட்டிங் செய்ய விதித்தின் மூலம் அவர் ஸ்கோர்போர்டில் ரன்களை சென்னை அணிக்காக குவித்துக்கொண்டிருந்தார்.
அவர் பேட்டிங்கில் அபாரமாக இருந்தது. அதே போன்று பந்து வீச்சாளர்களுக்கு ஏதுவான ஆடுகளத்தில் சென்னை அணிக்கு நல்ல ஸ்கொரை கொடுக்க அவரது ஆட்டம் தான் முக்கியமான காரணமாக இருந்தது. அங்கு பேட்டிங் செய்வது எளிதல்ல, ஆனால் அவர் மனம் தளராமல் இறுதிவரை நிலைத்து நின்றார்.
இதை அவர் பல ஆண்டுகளாக செய்து வருகிறார். எம்எஸ் தோனிக்குப் பிறகு சென்னை அணியின் இரண்டாவது மிக முக்கியமான தூண் அவர். அவர் 2023 இல் CSK க்காக பட்டத்தை வென்று கொடுத்தார். கடைசி இரண்டு பந்துகளில் ஜடேஜா ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து தங்கள் ஐந்தாவது பட்டத்தை உறுதிசெய்யும் முன் அவர்கள் ஆட்டத்திற்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தனர் என்றார் அம்பதி ராயுடு.




