உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்ற வருகிறது. அதில் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல் அணியும் விசாகப்பட்டினம் மைதானத்தில் பல பரீட்சை செய்தது. அதில் கொல்கத்தா அணிக்கு தான் சிறப்பான ஆட்டம் தான் முதல் இன்னிங்க்சில் அமைந்தது.ஆரம்பத்தில் இருட்ந்து கொல்கத்தா அணியின் வீரர்கள் வந்து அவர்களின் திறமையை நிரூபிக்கும் வகையில் சிக்ஸர் பவுண்டர்கள் என அடித்து டெல்லி கேப்டன் திணற வைத்திருந்தார்.

டெல்லி அணி இதற்கு முன்பு நடந்த மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று மீதி இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவி இருந்தது. ஆனால் கொல்கத்தா அணி இது வரை நடந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று ஏறு முகத்திலே இருந்து வருகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து இருந்தார். அது அவர்களுக்கு ஆரம்பம் முதல் இறுதி வரை சிறப்பாக முடிவாகவே மாறியது. கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சால்ட் மற்றும் சுனில் நரைன் இணைந்து கொல்கத்தா அணிக்கு ஆரம்பம் முதல் இருந்து அவர்களது அதிரடி ஆட்டத்தை காண்பித்து ரன்களை மளமளவென குவித்து இருந்தனர்.

அதில் சால்ட் 12 பந்துகளில் 18 ரன்கள் அடித்திருந்தார் ஆனால் மற்றொரு பக்கம் சிறப்பாக விளையாடிகொண்டிருந்த சுனில் நரேன் வெறும் 39 பந்துகளில் ஏழு பவுண்டரிகள் ஏழு சிக்ஸர்கள் 85 ரன்கள் அடித்து டெல்லி டெல்லி அணியின் பந்துவீச்சாளர்களுக்கு சவாலாக இருந்தார். அங்கிரிஷ் ரகுவன்ஷி 54 ரன்கள் அடித்திருந்தார் அதன் பின் ரசல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இணைந்து கொல்கத்தா அணிக்கு பார்ட்னர்ஷிப்பை மேலும் உறுதி செய்தனர்.
அதில் ஐயர் 11 பந்துகள் 18 ரன்களை அடித்து வெளியேற அதன் பின்பு வந்த ரிங்கு சிங்குடன் ரசல் இணைந்து மேலும் கொல்கத்தா அணிக்கு ரன்களை குவித்து வந்தனர். ஆண்ட்ரே ரசல் பத்தொன்பது பந்துகளில் 41 ரன்கள் அடித்திருந்தனர். இதன் மூலம் கொல்கத்தா 20 அவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 272 ரன்களை குவித்து ஐபிஎல் வரலாற்றில் இதுவே இரண்டாவது மிகப்பெரிய ஸ்கோரை பதிவு செய்து இருந்தனர். டெல்லி அணியின் பந்து பந்து வீச்சாளர்களை பற்றி சொல்ல வேண்டும் என்றால் அனைத்து பந்துவீச்சாளர்களும் சுமாராகவே செயல்பட்டுனர்.
ISHANT SHARMA WITH BALL OF THE IPL 2024…!!!!
— CricketMAN2 (@ImTanujSingh) April 3, 2024
– Even Andre Russell appreciating for his Incridible Yorker. 🙌👏 pic.twitter.com/tqhla0FOme
அதில் நோக்கியா மூன்று விக்கெட்டுகளையும் இஷான் சர்மா இரண்டு விக்கெட் கலையும் கலீல் அகமது மற்றும் மிட்செல் மார்ஷ் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். இதற்கு இடையில் 19வது ஓவரை வீசிய இஷாந்த் ஷர்மா தனது சிறப்பான யார்க்கர் மூலம் ரசலின் விக்கெட்டை அவர் வீழ்த்தி இருந்தார். அப்போது அந்த பந்தை அவர் சமாளிக்க முடியாமல் கீழே வீழ்ந்து இருந்தார். இருப்பினும் அந்த சிறப்பான பந்துவீச்சிற்கு அவர் எழுந்து நின்று கைதட்டி இஷாந்த் ஷர்மாவை உற்சாகப்படுத்தி இருந்தார். தற்போது டெல்லி அணி 7 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களில் விளையாடி வருகிறது.





