ஐபிஎல் 2023 க்கான 25 லீக் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியும் மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் எதிர்கொண்டன. இப்போட்டியானது ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற சன்ரைசஸ் அணி பௌலிங்கை தேர்வு செய்தது. அதன் படி மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்ய வந்தனர். இதில் மும்பை இந்தியன்ஸ் வெற்றியடைந்த நிலையில் அர்ஜுன் டெண்டுல்கர் தன்னுடைய முதல் விக்கெட்டை எடுத்துள்ளார்.

இந்த போட்டியில் ரோஹித் ஷர்மா தனது அதிரடியான ஆட்டத்தின் முலம் ஐபிஎல்லில் தனது 6000 ரன்களை கடந்த நிலையிலே நடராஜனிடம் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.கிஷன் 38 ரன்களிலே வெளியேறினார். பின்னர் காந்த எந்த பேட்ஸ்மேன்களும் பெரிதாக அடிக்கவில்லை. திலக் வர்மாவும் 37 ரன்களில் வெளியேற க்ரீன் 33 பந்துகளில் தனது அரை சத்தை பூர்த்தி செய்து அணிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினார்.
டிம் டேவிட் மற்றும் க்ரீன் இணைந்து கடைசி ஓவரை வீசிய நடராஜனின் பந்துகளை பறக்கவிட்டு 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 192 ரன்களை குவித்தனர். க்ரீன் மட்டுமே 64 ரன்களை அடித்தார். 193 ரன்களை எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய சன்ரைசஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ப்ரூக் 9 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து வெளியேறினார். சன்ரைசஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் ரன்களை எடுக்க கஷ்டப்பட்டு வந்தனர்.

ராகுல் த்ரிப்பாட்டியும் 7 ரன்களிலே வெளியேறினார். சன்ரைசஸ் அணியின் வீரர்கள் மும்பை அணியின் பௌலிங்கை சமாளிக்க கஷ்டப்பட்டு வந்தனர். அதன் பின்னர் வந்த அணியின் கேப்டன் ஒரு சில பவுண்டரிகளை அடித்து அணிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினார். ஆனால் அவராலும் ஜொலிக்க முடியாமல் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
A special moment for young Arjun Tendulkar, who gets his first wicket in #TATAIPL and it is his captain Rohit Sharma, who takes the catch of Bhuvneshwar Kumar.
— IndianPremierLeague (@IPL) April 18, 2023
Arjun takes the final wicket and @mipaltan win by 14 runs. pic.twitter.com/1jAa2kBm0Z
இந்நிலையில் ஹைதராபாத்ற்கு எதிராக கடைசி ஓவரை வீச வந்த அர்ஜுன் டெண்டுல்கர் ஹைதராபாத்தை 178 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார். ஐபிஎல் தொடரின் முதல் விக்கெட்டையும் கைப்பற்றினார். அவரது முதல் ஐபிஎல் போட்டிகளின் பலி புவனேஷ்வர் குமார். இந்த கடைசி ஓவரில் அர்ஜுன் அற்புதமாக பந்து வீசினார். கடைசி ஓவரில் 4 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். அதே சமயம் போட்டி முழுவதும் 2.5 ஓவர்கள் வீசி 18 ரன்களுக்கு 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
Three wins in a row for the @mipaltan as they beat #SRH by 14 runs to add two key points to their tally.
— IndianPremierLeague (@IPL) April 18, 2023
Scorecard – https://t.co/oWfswiuqls #TATAIPL #SRHvMI #IPL2023 pic.twitter.com/asznvdy1BS
அர்ஜுன் டெண்டுல்கர் பல வருடங்க்ளாக மும்பை அணியில் இருந்தும் கடந்த KKR vs MI போட்டியில் தான் அறிமுகமானர். அந்த போட்டியில் அர்ஜுன் 2 ஓவர்கள் வீசினார் ஆனால் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. இந்த நிலையில் தான் தன்னுடைய முதல் விக்கெட்டை எடுத்துள்ளார் அர்ஜுன். இது மும்பை ரசிகர்களுக்கும் சரி, அவரின் தந்தை சச்சின் டெண்டுல்கருக்கு சரி ஒரு பெருமைக்குரிய மகிழ்ச்சியான தருணம் என்றே சொல்லலாம்.





