பொதுவாக நுகர்வோருக்கு தேவையான பொருட்களை தயாரிக்கும் நிறுவங்கள் அவற்றினை அப்படியே நுகர்வோரின் கவனத்திற்கு கொண்டு செல்வது என்பது கொஞ்சம் கடினமான காரியம். அதிலும் புதிதாக ஒரு நிறுவனம் தொடங்குகிறோம் என்றால் அதனை பிரபல படுத்தினால் தான் தொழில் தொடங்கியவர்க்ளுக்கு லாபம் கிடைக்கும். அப்படி பிரபல படுத்த நுகர்வோருக்கும் நிறுவனத்திற்கும் இடையே வருபவர்கள் தான் பிரபலங்கள்.

ஆனால் அப்படி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் நபர்களை வைத்து விளம்பரம் செய்ய சில விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அது அவசியமும் கூட. அப்படி விதிமுறைகளை பின்பற்ற வில்லை என்றார் அந்தந்த நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
தோனி மீது புகார் :
அதே போல தான் பணம் வாங்கிக்கொண்டு விதிமுறைகளை மீறி விளம்பரத்தின் உண்மை நிலைமையை அறியாமல் நடித்து கொடுத்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க சட்டத்திற்கு உரிமை இருக்கிறது. அந்த வகையில் தான் இந்திய விளம்பர தரநிலை கவுன்சில் தற்போது விளம்பர விதிமுறைகளை மீறியதாக பட்டியலில் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அந்த பட்டியலில் தோனியின் பெயர் முதல் இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இரண்டாவது இடத்தில இந்தியாவில் பிரபல யூ டுபரான புவன் பாம் பெயரும் இருக்கிறது. அதோடு புவன் மீது 7 புகார்களும், தோனியின் மீது 10 புகார்களும் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டை பொறுத்தவரையில் பிரபலங்கள் மீது 55 புகார்கள் வந்துள்ள நிலையில் இந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரையில் சுமார் 8,951 புகார்கள் வந்துள்ளதாகவும். அதில் 7,928 புகார்கள் உறுதியாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த தகவல் தற்போது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக நுகர்வோர்களை மையமாக கொண்டு உருவாக்கப்படும் விளம்பரங்கள் மக்களை பாதிக்கும் படியாக இருக்க கூடாது. பிரபலங்கள் அந்த வகையான விளம்பரங்களை நடிக்கவும் கூடாது என்பது சட்டம். அப்படியொரு நிலையில் தான் தோனியின் பெயர் இதில் அடிபட்டிருப்பது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.




