ஐபிஎல் 2023 தொடரில் நேற்று நடந்த 17வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.டாஸ் வென்ற சென்னை அணி பௌலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை குவித்தது.அந்த அணியில் அதிகபட்சமாக பட்லர் 36 பந்துகளில் 52 ரன்களை அடித்த நிலையில் மொயின் அலியிடம் விக்கெட்டை இழந்தார்.அதன் பின் ஹெட்மயர் 18 பந்துகளிலே 30 ரன்களை குவித்து அணிக்கு பலம் சேர்த்தார்.

176 என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் ஆரம்பத்தில் இருந்தே தடுமாறி வந்தார். அதன் தொடர்ச்சியாகவே 8 ரன்களில் சந்தீப் சர்மாவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். அதற்கு அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க கேப்டனாக 200 வது போட்டியில் பேட்டிங்கில் களமிறங்கிய தல தோனி 17 பந்துகளில் 32 ரன்களை அடித்தார். இருந்த போதிலும் சென்னை அணி தோல்வியை தழுவியது.
அம்பயர்கள் பந்தை ஈர்ப்பத்திற்காக மாற்றியது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. இது இதுவரை நடந்ததே இல்லை. இந்த ஆண்டு ஐபிஎல்-ல் களத்தில் எடுக்கப்பட்ட சில முடிவுகள் நேர்மையாக இருக்கிறதா என்ற குழப்பம் என்னக்கு இருக்கிறது. அதாவது என்னை ஒரு நல்ல அல்லது கெட்ட வழியில் குழப்பமடையச் செய்தது. உங்களுக்குத் தேவையானது கொஞ்சம் பேலன்ஸ் என்று என்று அந்த விளையாட்டில் பிளேயர் ஆஃப் தி மேட்ச்சிற்க்கு தேர்வு செய்யப்பட்ட அஷ்வின் கூறினார்.

மேலும் பேசிய அஸ்வின் கூறுகையில் பந்துவீச்சு அணி என்ற வகையில், பந்தை மாற்றுமாறு நாங்கள் கேட்கவில்லை. ஆனால் நடுவர்களின் ஒப்புதலின் பேரில் பந்து மாற்றப்பட்டது. நான் நடுவரிடம் கேட்டேன், அதை மாற்றலாமா என்று கேட்டதற்கு மாற்றலாம் என்றார்கள். எனவே, ஒவ்வொரு முறை ஈரப்பதம் இருக்கும் போதும் ஐபிஎல் தொடரில் பந்தை மாற்றுவார்கள் என்று நம்புகிறேன். ஐபிஎல் தொடரில் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் நீங்கள் முன்னோக்கி செல்லும் தரத்தில் இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார் அஸ்வின்.
Ravichandran Ashwin has been fined 25% of his match fee for breaching the IPL Code of Conduct.
— Johns. (@CricCrazyJohns) April 13, 2023
இந்த சம்பவத்தினால் ஐபிஎல் 17வது போட்டியின் போது ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று ஐபிஎல் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.7 இன் கீழ் லெவல் 1 குற்றத்தை அஷ்வின் ஒப்புக்கொண்டார். நடத்தை விதிகளின் லெவல் 1 மீறல்களுக்கு, போட்டி நடுவரின் முடிவே இறுதியானது மற்றும் பிணைக்கப்படும்” என்று அது மேலும் கூறியது.





