ஐபிஎல் 2023ல் நேற்று நடந்த 34 லீக் போட்டியில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இதில் டெல்லி கேபிடல் அபார வெற்றிபெற்றனர். முதலில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அணியின் தொடக்க ஆட்டகாரர் பிலிப் சால்ட் முதல் பந்திலே அவுட்டாகி வெளியேற மார்ஷ் 25 ரன்களில் நடராஜனிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.

அதன் பின் வந்த சப்ராஸ் கான் மற்றும் ஹக்கீம் கானும் வாஷிங்க்டன் ஓவரில் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.அதன் பின் வந்த மனிஷ் பாண்டே மற்றும் அக்சர் பட்டேல் சேர்ந்து 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை பூர்த்தி செய்தார்கள். சன்ரைசஸ் அணியின் பௌலிங்கை சமளிக்க முடியாமல் டெல்லி அணியால் 20 வது ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 144 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
145 ரன்களை எடுத்தால் வெற்றி என களம் கண்ட சன்ரைசஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அணிக்கு நிதனமான தொடக்கத்தையே கொடுத்தனர். ஆனாலும் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆட்டமிழந்த பிறகு எந்த பேட்ஸ்மேன்களாலும் கடைசி வரையில் நீடிக்க முடியவில்லை. அப்படியொரு நிலையில் கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை பட்ட நிலையில், சன்ரைசஸ் 137 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. டெல்லி அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த வெற்றிக்கு பிறகு ஆட்டநாயகன் விருது வாங்கிய ஆக்ஸர் பட்டேலிடம் எது அவருக்கு அதிக மகிழ்ச்சியைக் கொடுத்தது பேட்டிங் அல்லது பந்துவீச்சா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஆக்ஸர் 2/21 இருக்கும் போது நான் ஒரு காபியை ஆர்டர் செய்தேன். ஆனால் ஒரு ஓவரில் மூன்று விக்கெட்டுகள் விழுந்ததும் காபி ஆர்டர் செய்து கிளாஸை அப்படியே வைத்துவிட்டு வந்துவிட்டேன் என்று கலகலப்பாக பேசினார் அக்சர் பட்டேல்.
😭😭😭😭 pic.twitter.com/k6ucGLJFgd
— a (@91atgabba) April 24, 2023
மேலும் பேசிய அவர் “பாண்டேவும் நானும் பேட்டிங் பொறுமையா ஆடலாம் என்றுமுடிவு செய்தோம். மைதானத்தின் மேற்பரப்பு ஸ்லோவாக இருந்ததினால் பந்தும் மெதுவாகத்தான் வந்தது. நானும் குல்தீப்பும் இந்த மேற்பரப்பில் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை எடுக்கலாம் என்று முடிவு செய்தோம். மேலும் மயங்க் விக்கெட் எடுப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது. இந்த வெற்றிக்கு எங்கள் அணியின் கூட்டு முயற்சியே காரணம் என்று கூறினார் ஆக்ஸர் பட்டேல்.





