கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐபிஎல் 2023 தொடரானது மிகவும் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இதில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் பைனலுக்கு சென்ற நிலையில் சென்னை அணி வெற்றி பெற்றது. ஆனால் இந்த போட்டி நடந்து முடிய 3 நாட்கள் எடுத்தது. ஏனென்றால் ஐபிஎல் 2023 பைனல் 28 ஆம் தேதி நிர்ணயக்கப்ட்டது. ஆனால் போட்டி 29 ஆம் தேதி நடந்தது. ஆனாலும் போதும் மழை குறுக்கிட்டதால் 30 ஆம் தேதி தோராயமாக அதிகாலை 1.30 மணியளவில் தான் முடிந்தது.

அஹமதாபாத் மைத்தனத்தில் நடந்த இந்த போட்டி 28ஆம் தேதி மழை காரணமாக தடை பட்டதால் 29 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. இருந்த போதிலும் இரண்டாவது இன்னிங் பிறகு மழை பெய்தது. ஆனால் சில விரைகவே மழை நின்றாலும் மைதானத்தில் உள்ள பயிற்சி எடுக்கும் விக்கெட் மழை நீரால் பாதிக்கப்பட்டது. இதனால் மழை நின்றும் கூட போட்டி தொடங்க 1.30 மணி நேரத்திற்கு மேலாக ஆனது.
மேலும் மைதானத்தை சரிசெய்ய பஞ்சுகள் கொண்டு நீரானது உரியப்பட்டது. இந்நிலையில் இப்படி உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ இப்படி பஞ்சுகளை வைத்து நீரை எடுக்கலாமா என்றும் பல கிரிக்கெட் வாரியங்களிடம் நவீன கருவிகள் இருக்கும் போது அதனை ஏன் இன்னமும் வாங்கவில்லை என்று இனைய வாசிகள் கேள்வி எழுப்பி விமர்சித்தனர். இது தொடர்பான பல மீம்ஸ் சோசியல் மீடியாவில் பரவலாக வைரலாகியது.
Dear @TheBarmyArmy how expensive is this? Can you please lend this to @BCCI @JayShah as the richest board is unfortunately unable to afford. We swear we’ll return it right after the World Cup! 🙏🏻
— Ritwik Ghosh (@gritwik98) May 29, 2023
#CSKvGT #Rain #IPL2023Finals pic.twitter.com/kqditTvGhq
அப்படிப்பட்ட நிலையில் தான் இந்த நிலைமைக்கு பெங்கால் கிரிக்கெட் வாரியம் யோசனை ஒன்றை வழங்கியுள்ளது. அதாவது கொல்கத்தா ஈடன் கார்டன் மைத்தனத்தில் உள்ளது போன்று முழு மைத்தனத்தையும் மூடக்கூடிய அளவிற்கு கவர் வசதியை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று குஜராத் கிரிக்கெட் வாரியத்திற்கு பெங்கால் கிரிக்கெட் வாரியம் அறிவுரை கூறியுள்ளது. மேலும் இந்து வரும் 50 ஓவர் போட்டிகளுக்கு முன்னர் உடனடியாக செய்யவேண்டும் என்று வற்புறுத்தியுள்ளது.

ஏனென்றால் உலகக்கோப்பை ஒருநாள் போட்டிகள் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் சில போட்டிகள் நடைபெற இருக்கிறது. அப்படி நடைபெறும் போது மழை பெய்து ஐபிஎல் பைனலில் நடந்தது போன்று போட்டிக்கு இடையூறுகள் நடந்தால் கண்டிப்பாக அது இந்தியாவிற்கு கேட்ட பெயரை ஏற்படுத்தும். அது நடக்காமல் இருக்க முறையான நடவடிக்கைகள் எடுப்பது முக்கியம் என்று தெரிவிக்கின்ற்றனர் நெட்டிசன்கள்.





