உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர் பார்த்து காத்து கொண்டு இருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. அதில் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சின்னசாமி மைதானத்தில் பல பரீட்சை செய்தது. இன்றைய போட்டி ஐபிஎல் 2924க்கு மிகவும் முக்கியமான போட்டி என்று சொல்லலாம். இன்றைய போட்டியில் வெற்றி பெரும் அணிக்கு தான் ப்ளே ஆப்பிற்க்கு தகுதி பெற அதிக வாய்ப்புகள் உள்ளது.

சென்னை அணி தோல்வியை தழுவினாலும் 18 ரன்கள் வித்தியாதிற்கு மேல் தோல்வியை தழுவினாலும் சென்னை அணியே ரன்ரேட் வித்தியாசத்தில் ப்ளே ஆப்பிற்கு செல்லும். ஏற்கனவே கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் ப்ளே ஆப்பிற்கு தகுதி பெற்று விட்டது. இன்றைய போட்டியி டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அது பெங்களூரு அணிக்கு தான் சாதகமாக அமைந்தது.
பெங்களூரு அணியின் பேட்ஸ்மேன்கள் தங்களது கடமைக்கு ஏற்ப அதிரடியாக விளையாடி சென்னை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 218 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக பெங்களூரு அணியின் கேப்டன் டுபிளசிஸ் 54 ரன்களும் ரஜத் படிதார் 41 ரன்களையும் கிரீன் 38 ரன்களையுய்ம் அடித்து இருந்தனர். சென்னை அணியின் பந்து வீச்சு மிகவும் மோசமாக இருந்தது.

ஷர்தூல் தாக்கூர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தாலும் 61 ரன்களை வாரி வழங்கி இருந்தார். அதன் பின் 219 ரன்களை இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அது மட்டும் அல்லாமல் ப்ளே ஆப்பிற்கு செல்லும் வாய்ப்பையும் சென்னை அணி இழந்தது. சென்னை அணி 10 எடுத்து இருந்தால் ப்ளே ஆப்பிற்கு தகுதி பெற்று இருக்கும் ஆனால் அது போல் சென்னை அணிக்கு நடக்கவில்லை. இதில் சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை ஒரு சில வீரர்களை மட்டும் தவிர.

முதலில் கேப்டன் ருதுராஜ் ரன்களை எடுக்காமல் 0 ரன்னில் வெளியேறினார். சென்னை அணியின் சார்பில் ரச்சின் ரவீந்திரா 61 ரன்களும் ஜடேஜா 42 ரன்களும் ரகானே 33 ரன்களும் தோனி 25 ரன்களையும் மட்டுமே அடித்து இருந்தனர். இதன் மூலம் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருந்தது. இதன் மூலம் பெங்களூரு அணி மே 18ஆம் தேதி வெற்றியை தொடர்ந்து வருகிறது. இது தான் தோனியின் கடைசி போட்டியா என்பது பற்றி இதுவரை தெரியவில்லை.




