உலகின் மிகப்பெரிய டி20 போட்டிகளில் ஒன்றான ஐபிஎல் கடந்த மாதம் தொடங்கி தற்போது கோலாலமாக நடந்து வருகிறது. இந்த சீசனில் கடந்த சில போட்டிகளில் பல நம்பமுடியாத நிகழ்வுகள் நடந்தது. அவற்றில் கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள், கடைசி ஓவரில் தொடர்ந்து 4 விக்கெட்டுகள், 5 ஓவரில் 10 ரன்கள் போன்றவை அடங்கும். அப்படி சில அதிர்ச்சியான நிகழ்வுகளை கொண்ட இந்த ஐபிஎல் சீசன் தற்போது சுறுசுறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

ஒவொவொரு அணியும் எல்லா போட்டிகளிலும் வேற்று பெற வேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை அணியும் தங்களுடைய விளையாட்டை முற்றிலுமாக மாற்றியுள்ளது. ஏனெற்றால் சென்னை அணியின் பலவீனமே பந்துவீச்சு என்ற நிலையில் கடைசி சில போட்டிகளில் மிகவும் பிரமாதமாக அதுவும் அணியின் முக்கிய பந்துவீச்சாளர் காயத்தினால் வெளியில் இருக்கும் நிலையில் அற்புதமாக ஆடி வருகிறது சென்னை.
அப்படிப்பட்ட நிலையில் தான் நேற்று பிரபல ஊடகம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழ் நாட்டின் பாஜக தலைவர் அண்ணாமலையிடம் தற்போது ஐபிஎல் சீசன் குறித்து கேட்கப்பட்டது. நீங்கள் ஆர்சிபியின் ரசிகரா அல்லது சிஎஸ்கே ரசிகரா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அண்ணாமலை கூறுகையில் “நான் இங்கே ஓன்று சொல்ல விருப்பப்படுகிறேன், நாம் ஐபிஎல் அணிகளாக பிரிந்திருந்தாலும் இந்தியராக இணைத்திருக்கிறோம்.
I am a CSK Hard core supporter. Thala @msdhoni has given us much pleasure. This time we should win the Cup. @ChennaiIPL pic.twitter.com/nbFmsoRx7Q
— Army of Dheeran Annamalai (@annamalai_chap2) April 22, 2023
நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர ரசிகன். தோனி அவர்கள் எங்களுடைய பெருமை, இந்த சீசன் தோனியின் கடைசி சீசனாக இருக்கலாம். ஆனாலும் நாங்கள் அனைவரும் போட்டிகளில் தோனி விளையாடுவதை காண ஆவலாக இருக்கிறோம். அவர் மகிழ்ச்சியாகவும், தன்னம்பிக்கையுடனும் போட்டிகளில் ஆடுகிறார். அதற்கு தமிழ் மக்களாலும் அதிக அளவு பாசத்தை தோனியின் மீது பொழிகின்றனர்.

இந்த சமயத்தில் நான் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறேன் ஏனெற்றால் தோனி எங்களுக்கு அதிக மகிழ்ச்சியை கடந்த 14 வருடங்களாக தமிழ் நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கொடுத்திருக்கிறார். வரும் போட்டிகளில் நான் மிகுந்த சிஎஸ்கே ரசிகராக இருப்பேன். ஏனெற்றால் அவருடைய கிரிக்கெட் பயணம் மகிழ்ச்சியாக இருக்க நாங்கள் விரும்பிகிறோம் என்றார் தமிழ்நாட்டின் பாஜக தலைவர் அண்ணாமலை.

பின்னர் பேசிய தொகுப்பாளர் இந்த வரும் ஆர்சிபி வெற்றியடையும் என்று நினைக்கிறன், அது எங்களுடைய நீண்டநாள் கனவாக இருக்கிறது என்று கூற அண்ணாமலை “தொடர்த்து கனவு கண்டுகொண்டே இருங்கள் என்று கலாய்த்து விட்டார். அந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரையில் இதுவரையில் 6 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் 4 போட்டிகளில் வெற்றியை பெற்று 3 வது இடத்தில இருப்பது குறிப்பிடதக்கது.





