
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பாத்து காத்துகொண்டு இருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22முதல் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. அதில் நேற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதியது. ராஜஸ்தான் அணி கடந்த போட்டியில் தோல்வியையும் தழுவி இருந்தது. இந்த இரு அணிகளும் நேற்றைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இன்றைய போட்டியில் களமிறங்கியது.

இதில் இரு அணிகளின் பல முன்னணி வீரர்கள் களமிறங்கவில்லை . அஷ்வின் தவான் பட்லர் போன்ற பல முக்கிய வீரர்கள் காயம் காரணமாக பங்கேற்க்கவில்லை. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் சரியான முறையில் ரன்களை குவிக்க முடியவில்லை. ஆனால் அதன் பின் வந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் ரன்களை குவிக்க முடியாமல் ராஜஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியே வந்தனர். இறுதியில் வந்த அர்ஷ்தோஷ் ஷர்மா சிறப்பாக விளையாடி 16 பந்துகளில் 31ரன்களை அடித்து இருந்தார்.
இதன் மூலமாக தான் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை அவர் குவித்து இருந்தார். ராஜஸ்தான் அணியின் சார்பில் ஆவேஸ் கான் மற்றும் மகாராஜ் தலா இரண்டு விக்கெட்டுகளையும் போல்ட், குல்தீப் சென் மற்றும் சஹல் தலா ஒரு விக்கெட்டுகளையும வீழ்த்தி இருந்தனர்.அதன் பின் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியோ ஆரம்பத்தில் தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடி இருந்தாலும் அதன் பின் வந்த வீரர்கள்20இருந்தே தடுமாறி தான் விளையாடி வந்தது. இருப்பினும் இதில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் என்றால் ஷிம்ரோன் ஹெட்மியர் தான். கடைசி 2 பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சிக்சர் அடித்து அணியை அவர் வெற்றி பெற வைத்தார். இதில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 39 ரன்களையும் ஷிம்ரோன் ஹெட்மியர்27 ரன்களையும் அடித்து இருந்தனர். எனவே இறுதியில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி சார்பில் ராபாடா மற்றும் சாம் கரண் தலா இரண்டு விக்கெட்டுகளையும் அர்ஷ்தீப் சிங் லிவிங்க்ஸ்டன் மற்றும் ஹர்ஷால் படேல் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர். பஞ்சாப் அணி இறுதி வரை போராடி தோல்வியை தழுவி இருந்தது.

தோல்வி குறித்து கேப்டன் சாம் கரண் கூறுகையில், ஆடுகளம் விக்கெட் சற்று மெதுவாக இருந்தது. நாங்கள் பேட்டிங் நன்றாகத் தொடங்கவில்லை, பின்னர் நாங்கள் நன்றாக முடித்தோம். நாங்கள் செய்ததை அடைய இது ஒரு நல்ல முயற்சி. எந்த நேரத்திலும் நீங்கள் 150ஐ எட்டினால், நீங்கள் விளையாட்டில் இருப்பீர்கள். துரதிருஷ்டவசமாக, எங்களுக்கு மற்றொரு நெருக்கமான ஒன்று, ஆனால் நாங்கள் கடைசி வரை பாசிடிவ் ஆக போட்டியை எடுத்து சென்றோம். நாங்கள் மேம்படுத்தி இன்னும் சில ரன்கள் எடுக்க விரும்புகிறோம். நாங்கள் ஒரு யூனிட்டாக நன்றாகப் பந்துவீசி நன்றாக பீல்டிங் செய்தோம். கொஞ்சம் ஏமாற்றம், அடுத்த ஆட்டத்தில் மீண்டு வருவோம். இங்கு நிலைமைகள் அனைவருக்கும் புதியவை, போட்டியில் கடைசி வரை இருந்ததற்கு வீரர்கள் பெருமை கொள்கிறோம்.





