நேற்று நடந்த ஐபிஎல் 2023 தொடரின் எலிமினேட்டர் போட்டியில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் மோதின. இதில் மும்பை அணி லக்னோ அணியை 16.3 ஓவர்களில் ஆல் அவுட் செய்து 81 ரன்கள் விதியசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த சுவாரசியமான சம்பவங்களினால் லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக் மீது ரசிகரக்ள் கடும் அதிர்த்தியில் இருந்தனர்.

ஏனென்றால் இந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி மற்றும் லக்னோ அணிகள் மோதிய போது விராட் கோலிக்கும் கம்பீருக்கும் பெரிய வாக்குவாதம் நடந்தது. ஆனால் அதற்கு முக்கியமாக கருதப்படுவது நவீன் உல் ஹக் தான். எனவே அப்போதிலிருந்தே ரசிகர்கள் நவீன் மீது கடும் கோபத்தில் இருந்தனர்.
அதற்கு தகுந்தாற் போல நவீனும் ஆர்சிபி vs மும்பை போட்டியில் போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் போட்டியில் ஸ்கீரின் ஷாட்டுகளை போட்டு சூசகமாக கிண்டல் செய்தார் நவீன். அதற்கு ரசிகர்களும் பதிலடி கொடுத்த வண்ணம் இருக்கையில் தான் நேற்று நடந்த போட்டியில் அன்று நடந்த வற்றை மறக்காத ரசிகர்கள் ஒரு சம்பவத்தை செய்துள்ளார்.
Crowd shouting Virat Kohli's name when Naveen-ul-Haq is near them.
— 𝙈𝙖𝙮𝙖𝙣𝙠 (@moonx18_) May 24, 2023
Hyderabad ✅
Kolkata ✅
Chennai ✅
Mass! pic.twitter.com/xfoFJh9hnA
அதாவது நேற்று நடந்த எலிமினேட்டர் போட்டியின் போது நவீன் உல் ஹக் மைத்தனத்தின் பவுன்டரிகளுக்கு அருகே நின்று பீல்டிங் செய்யும் போது அமர்ந்திருந்த ரசிகரகள் கோலி கோலி என முழக்கமிட்டனர். அப்போது நவீன் எதோ கையசைத்து சென்று விட்டார். அதற்கு பிறகு சில ஓவர்களிலேயே மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, கேமரூன் கிரீன், சூரிய குமார் யாதவ், திலக் வர்மா உள்ளிட்டோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி பதிலடி கொடுத்தார்.
Chepauk crowd chanting "Kohli, Kohli" when Naveen Ul Haq bowling. pic.twitter.com/Oi0PFkpHTc
— CricketMAN2 (@ImTanujSingh) May 24, 2023
ஆனாலும் ரசிகர்கள் நவீனை விடுவது போல இல்லை தொடர்ந்து கோலி கோலி என முழக்கமிட்டனர். அதுமட்டுமின்றி அவர் பந்து வீசும் போது கூட கோலி கோலி என முழக்கமிட்டனர். அப்படிப்பட்ட நிலையில் தான் 17வது ஓவரின் போது ஒரு சம்பவம் நடந்தது. அதாவது எந்த ஓவரை நவீன் வீச வந்தார். ஆனால் முதல் பந்தே சிக்ஸர் கொடுக்க அடித்த மூன்று பந்துகள் WIDE கொடுத்தார். அதற்கு காரணம் மைத்தனத்தில் இருந்தவர்கள் கோலி கோலி என முழக்கமிடத்தே என்று கூறப்படுகிறது.
இது மட்டுமின்றி முதல் இன்னிங் முடிந்து இரண்டாவது இன்னிங்கில் லக்னோ அணிக்கு அதிமான விக்கெட்டுகள் விழ தொடங்கியதால் நவீன் உல் 14வது ஓவரில் களமிறங்கினார். ஆனால் அப்போதும் ரசிகர்கள் கோலி கோலி என்று முழக்கமிட்டனர் இந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.





