ஐபிஎல் 2023தொடர் தற்போது மிகப்பிரமாதமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பல போட்டிகள் முடிந்த நிலையில் அனைத்து அணிகளுமே இன்னமும் சில போட்டிகள் மட்டுமே இருக்கிறது பிளே ஆஃப்பிற்கு செல்வதற்கு. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது புள்ளி பட்டியலில் 2 வது இடத்தில இருக்கின்றார். எனவே அதிகபட்சம் சென்னை பிளே ஆஃப் செல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.

அப்படிப்பட்ட நிலையில் தான் தற்போது டெல்லிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னர் தோனி உலக புகழ்பெற்ற தமிழ் நாட்டு தம்பதிகலான The Elephant Whisperers குறும்படத்தின் நட்சத்திரங்கள் பொம்மண் மற்றும் பெள்ளியை தோனி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் இந்த தம்பதிக்கு பரிசு ஒன்றை வழங்கியது.
மேலும் தோனி தன்னுடைய நம்பரை கொண்ட ஜெர்சியை அன்பளிப்பாகவும் கொடுத்தார். அதோடு சென்னை அணியின் நிர்வாகம் 5 லட்சம் மதிப்புள்ள காசோலையை The Elephant Whisperers காசோலையை பரிசாக வழங்கியது. அந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
All the #Yellove for Ammu and Raghu!🐘#CSKvDC #WhistlePodu 🦁💛 @EarthSpectrum @IPL pic.twitter.com/g9sXY9Bg25
— Chennai Super Kings (@ChennaiIPL) May 10, 2023
The Elephant Whisperers :
முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் தாயை பிரிந்த நிலையில் பொம்மி, ரகு ஆகிய இரண்டு யானை குட்டிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. பிறந்த ஒரு சில மாதமே ஆன நிலையில் இந்த யானை குட்டிகள் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டுவரப்பட்டது.
Tudumm 🎬 Special occasion with very special people 💛🐘#WhistlePodu #Yellove 🦁 pic.twitter.com/AippVaY6IO
— Chennai Super Kings (@ChennaiIPL) May 10, 2023
மேலும், இந்த யானை குட்டிகளை வளர்த்து வருபவர்கள் தான் பொம்மண் மற்றும் அவருடைய மனைவி பெள்ளி. இவர்கள் இந்த யானை குட்டிகளை எப்படி எல்லாம் பராமரிக்கிறார்கள்? அதன் மீது எப்படி அன்பு செலுத்துகிறார்கள்? என்பது குறித்த ஆவண படமாக தான் இந்த The Elephant Whisperers உருவாகியிருந்தது.
Thala #Dhoni With OSCAR Winning #TheElephantWhisperers Team🐘✨
— Saloon Kada Shanmugam (@saloon_kada) May 10, 2023
Dhoni Gifted Number 7 T-Shirt To #BELLIE – #BOMMAN & To Director #KartikiGonslaves pic.twitter.com/BPDllgZyIh
இந்த படம் 2022 ஆம் ஆண்டு நெட்ப்ளிக்சில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை கார்திகி கோன்சால்வ்ஸ் என்பவர் இயக்கி இருந்தார்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும், இந்த படம் குறித்து பல பிரபலங்கள் பாராட்டி இருந்தார்கள். இந்த நிலையில் இந்த The Elephant Whisperers படம் இந்தியாவின் முதல் ஆஸ்கர் படம் என்ற பெருமையை பெற்றது குறிப்பிடதக்கது.





