இந்தியன் பிரீமியர் லீக் 2023ல் நேற்று இரவு சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே சிறப்பான ஆட்டம் நடந்தது. இந்தப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணி புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது, ஆனால் இதற்கிடையில் சென்னை அணிக்கு ஒரு பெரிய கெட்ட செய்தியும் வந்துள்ளது.

ஏனென்றால் கோடிக்கணக்கில் விலை கொடுத்து வாங்கப்பட்ட ஆல்ரவுண்டர் இன்னும் சில போட்டிகளுக்கு அணியில் இருந்து வெளியேறப் போவது கூறப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த ஆண்டு ஏலத்தில் பென் ஸ்டோக்ஸை ஒரு பெரிய ஏலத்தில் வைத்து அணியில் சேர்த்தது. பல அணிகள் பென் ஸ்டோக்ஸை ஏலத்தில் எடுத்த நிலையில் கடைசியாக CSK 16 கோடி ரூபாய் என்ற பெரிய விலை கொடுத்து வாங்கியது.
கடந்த போட்டிகளில் இருந்து வெளியேறிய பென் ஸ்டோக்ஸ் அணிக்கு திரும்புவதற்கான எந்த அறிகுறியும் இன்னும் காணப்படவில்லை. பென் ஸ்டோக்ஸின் ஃபிட்னஸ் குறித்து பல தகவல்கள் சோசியல் மீரியாவில் வெளியாகியுள்ளது ஆனால் அவை அதிகாரப்பூர்வமானவை கிடையாது. பிரபல ஆங்கில சோசியல் மீடியாவின் செய்தியின்படி பென் ஸ்டோக்ஸ் முழு உடல் தகுதி பெற இன்னும் ஒரு வாரம் ஆகும் என்று கூறப்படுகிறது.

அது உண்மை என்ற நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் குறைந்தது இரண்டு போட்டிகளிலாவது விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. ஒரு வேலை காயம் அப்படியே இருந்தால் பென் ஸ்டோக்ஸ் தனது நாட்டுக்கு திரும்பலாம் என்றும் சில தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஃபிரான்சைஸ் கிரிக்கெட்டை விட நாட்டிற்காக விளையாடுவது தனக்கு முக்கியம் என்று பென் ஏற்கனவே பேட்டி ஒன்றில் பேசும் போது கூறியிருந்தார்.

வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஆஷஸ் தொடருக்கான ஏற்பாடுகளை கருத்தில் கொண்டு ஸ்டோக்ஸ் ஐபிஎல் தொடரை பாதியில் விட்டுவிட்டு இங்கிலாந்து செல்லலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. பென் ஸ்டோக்ஸை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17 கோடி ரூபாய்க்கு வாங்கியது. ஆனால் இவரால் CSK க்கு எந்த பயனும் இல்லை. ஐபிஎல் 16ல் இதுவரை இரண்டு போட்டிகளில் மட்டுமே ஸ்டோக்ஸ் விளையாடி 15 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.





