ஐபிஎல் 2023சீசன் 9வது போட்டியில் கொல்கத்தா அணி இக்கட்டான சூழ்நிலையில் இருந்த போது ஷர்துல் தாகூர் அணியின் வெற்றிக்காக 28பந்துகளில் 69 ரன்கள் அடித்து சாதனை படைத்தார். அந்த சாதனை கொல்கத்தா அணிக்கு நம்பிக்கையை கொடுத்தது பலமான ஆர்சிபி அணியை வீழ்ந்த உதவியது. இந்நிலையில் ஷர்துல் தாக்கூர் செய்த அந்த அற்பத்தமான செயலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் சென்னை ரசிகர்கள் கடுமையாக ஷர்துல் தாக்கூரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

தொடக்கத்தில் ஆர்சிபியின் அருமையான பந்துவீசினால் திணறிய கொல்கத்தா அணிக்கு மூன்றாவது ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் ஐயரின் விக்கெட் விழுந்தது. அந்த விக்கெட்டுக்கு பிறகே அடுத்த பந்தில் மன்தீப் சிங் ஆட்டமிழந்தார். இதனால் கொல்கத்தா அணிக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதனை தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணி கேப்டன் நிதிஷ் ராணா தன்னுடைய விக்கெட்டை இழந்தார்.
இப்படி வெறும் 6 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணிக்கு அதிர்ச்சிக்கு மேலே அதிர்ச்சியாக சிக்ஸர் நாயகன் ஆன்ட்ரே ரசலும் தன்னுடைய ஆட்டத்தை இழந்தார். இப்படி பல நட்சத்திர வீரர்கள் ஆட்டமிழந்த நிலையில் நம்பிக்கை நாயகனாக வந்தவர் தான் ஷர்துல் தாக்கூர். இவர் ஆன்ட்ரே ரசலுக்கு இணையாக அதிரடியாக விளையாடி வெறும் 20பந்துகளில் 51 ரன்கள் எடுத்து கலக்கினார்.

20 பந்துகளில் அரை சதம் :
அதனை தொடர்ந்து அதிரடியாக பல பவுண்டரிகளுடன் ஷர்துல் தாக்கூர் 29 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். இவர் எடுத்த ரன்களினால் மொத்த இலக்கு அதிகமானதால், ரன் அடித்தே ஆகவேண்டும் என்ற அழுத்தில் இறங்கிய ஆர்சிபி தொடர்ந்து பல விக்கெட்டுகளை இழந்து தல்வியடைந்தது. மேலும் ஷர்துல் தாக்கூர் விக்கெட்டுகளையும் வீழ்த்தியதால் ஆட்டநாயகன் விருதும் அவருக்கு கிடைத்தது. இந்நிலையில் ஷர்துல் தாக்கூருக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்துவரும் நிலையில் தான் சென்னை ரசிகர்கள் ஷர்துல் தாக்கூர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

2019 சிஎஸ்கே vs மும்பை :
ஏனென்றால் கடந்த 2019 ஆம் ஆண்டு ஷர்துல் தாக்கூர் சென்னை அணிக்காக வெளியாடினார். அப்போது இறுதிப்போட்டி வரை வந்த சென்னை அணிக்கு கடைசி ஓவரில் வாட்சன் அவுட்டாக 2 ரன்கள் தேவைப்பட்டிருந்த நிலையில் தீபக் சஹர் மற்றும் ஹர்பஜன் சிங்கிற்கு பதிலாக ஷர்துல் தாக்கூரை சென்னை அணி அனுப்பியது. 2 ரன்கள் எடுத்து வெற்றியடைய தேவையில்லை என்றாலும் ஒரு ரன் ஆவது எடுத்து டிரா செய்ய வேண்டும் என்று சென்னை ரசிகர்கள் இருந்தனர்.

சென்னை ரசிகர்களின் கோபம் :
ஆனால் ஷர்துல் தாக்கூர் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். அது சென்னை ரசிகர்களுக்கு ஆறாத வடுவாக இருந்தது. அப்படிப்பட்ட ஷர்துல் தாக்கூர் தற்போது 20 பந்துகளில் அரை சதம் எடுத்தது ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் ஒரு ரன்னில் கோப்பையை சென்னை இழந்ததினால் அந்த ஒரு வருத்தம் இன்று ரசிகர்கள் மனதில் இருந்து வருவதினால் தான் பலரும் ஷர்துல் தாக்கூரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.




