சென்னை சூப்பர் கிங்ஸ் என்று சொன்னால் போதும் முதலில் நியாபகம் வருவது தல எம்.எஸ்.தோனி என்ற பெயர் தான், அந்த அளவிற்கு எம்.எஸ்.தோனிக்கும் சென்னை மண்ணிற்கும் உள்ள ஒரு பிணைப்பை யாராலும் பிரிக்க முடியாது. தமிழ் நாட்டு மக்கள் பல வட இந்தியர்களை வெறுத்தாலும் அனைவராலும் வெறுக்கப்படாத ஒரு வட இந்தியர் யார் என்றால் அது எம்.எஸ்.தோனி தான். அந்த அளவிற்கு சென்னை முழுவதும் ‘தல’ என்று அன்புடன் அழைக்கப்படும் தோனியின் இரண்டாவது சொந்த ஊர் சென்னை என்றே சொல்லலாம்.

ஐபிஎல் தொடங்கி காலத்திலிருந்து இன்று வரையில் அதிகமுறை ஒரே அணிக்கு கேப்டனாக இருந்த ஒரே வீரர் அது எம்.எஸ்.தோனி தான். அதோடு இவரது தலைமையில் சென்னை அணி நான்கு முறை ஐபிஎல் படங்களை வென்றிருக்கிறது. அதே ஐசிசி போட்டிகளில் மூன்று காப்புகளை வாங்கிய ஒரே இந்திய கேட்டன் என்ற பெருமையும் தோனிக்கு இருக்கிறது. தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றலும் அவரது பெருமை இன்னமும் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது.
இந்நிலையில் தோனி கூறுகையில் “நான் இந்தியாவிற்காக 2004ஆம் ஆண்டில் இருந்து ஆரம்பித்தேன். அப்போது இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற எவையுமே கிடையாது. ஆனால் இப்போது பலர் லய்க்ஸ் வரவில்லை என்று பாலோவர் வரவில்லை என்று வருத்தப்படுகிறார்கள். ஆனால் அது முக்கியமான விஷயம் கிடையாது. நான் என்னுடைய வாழ்க்கையில் சந்தித்த பல கிரிக்கெட் வீரர்களுக்கு நான் கூறுவது நமக்கு கிரிக்கெட் தான் மிகவும் முக்கியம்.
கிரிக்கெட்டை சுற்றி இருக்கும் அனைத்தும் தன்னைத்தானே கவனித்துக் கொள்ளும். உங்களுக்கு மிகவும் முக்கியமானது கிரிக்கெட். ஒரு கிரிக்கெட்டராக நாங்கள் எங்களால் முடிந்த அளவிற்கு உலக அரங்கில் நாட்டின் மதிப்பை உயர்த்தி நன்றாக விளையாட வேண்டும். நாங்கள் அதனை சரியாக செய்தால். எங்களை பின்தொடர்பவர்கள் தானாக வருவார்கள். லய்க்ஸ் தானாக வரும். நீங்கள் அனைத்தையுமே பிரித்து வார்க்க வேண்டும் என்று தோனி பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் தற்போது நடந்துவரும் ஐபிஎல் 2023 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 போட்டிகள் விளையாடி அதில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. அதோடு இன்று இரவு கொல்கத்தா மைதானத்தில் சென்னை அணி கொல்கத்தாவை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டியில் சென்னை வெற்றியடையும் பட்சத்தில் முதல் அல்லது இரண்டாவது இடத்திற்கு வர அதிகம் வாய்ப்பு இருக்கிறது.





