ஐபிஎல் 16 கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது நடந்து வரும் 12வது லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதி வருகின்றனர். இதுவே ஐபிஎல் 16சீசனில் சென்னை மற்றும் மும்பை நேருக்கு நேராக மோத இருக்கும் முதல் போட்டி என்பதினால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இமயத்தை தொட்டுள்ளது. மேலும் இந்த போட்டி மும்பை அணியின் சொந்த அரங்கமான வான்கடே மைதானத்தில் விளையாடி வருகிறது.

சொல்லபோனால் சென்னை சூப்பர் கிங்ஸ் 9 வது இடத்திலும் மும்பை இந்தியன்ஸ் பரிதாபப 10வது இடத்திலும் இருந்தது. அது சென்னை ரசிகர்களுக்கும் சரி, மும்பை ரசிகர்களுக்கும் சரி கஷ்டகாலம் தான். இதனால் இந்த சீசனில் சென்னை மற்றும் மும்பை தங்களுடைய வெற்றி கணக்கை இந்த போட்டி மூலம் தொடரவும் கடுமையாக முயற்சி செய்யும். அப்படியொரு நிலையில் தான் இன்று நடுக்கும் முதல் சென்னை vs மும்பை போட்டியில் முதலில் டாஸ் வெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச முடிவு செய்தது.
இந்நிலையில் தூக்கம் எப்போதும் போல மும்பை இத்தியன்ஸ் அணிக்கு நன்றாக இருந்தாலும் அவர்களது தீராத சாபம் மீண்டும் அவர்களு தொற்றிக்கொண்டது . தொடக்கம் முதல் 3 பௌண்டரிகள் 1 சிக்ஸர் அடித்த ரோஹித் சர்மாவை தேஷ்பாண்டே ஆட்டமிழக்க செய்தார். அதில் இருந்துதான் மும்பை அணிக்கு விக்கெட்டுகள் விழ ஆரம்பித்தது. பின்னர் 6.4 ஓவரில் இஷான் கிஷான் ஜடேஜாவின் பந்துல ஆட்டமிழக்க அடுத்த பந்தே ஒரு அதிசயம் நடந்தது.

ஆதவாது 7.2 ஓவரின் போது சூழல் பந்து வீச்சாளர் சான்ட்னர் சூரியகுமார் யாதுவுக்கு பந்து வீசினார். அந்த பந்து நேரடியாக பேட்ஸ்மேனின் கையில் பட்டு தோனியிடம் சென்றது. ஆனால் அதற்கு அம்பயர் அவுட் கொடுக்காத நிலையில் சில நொடிகளிலேயே தோனி DRS எடுத்தார். அதில் சூரியகுமார் ஆட்டமிழந்தது சரியாக தெரிந்தது. அந்த வீடியோ தான் தற்போது ஷோசியல் மீடியாவில் தோனி ரீவிவ் சிஸ்டம் என்று வைரலாகி வருகிறது.
Dhoni Review System™️ for a reason 😎#MIvCSK #TATAIPL #IPLonJioCinema pic.twitter.com/CkhN6bp61H
— JioCinema (@JioCinema) April 8, 2023
மேலும் அந்த சம்பவத்தை அடுத்து 13வது ஓவரில் திலக் வர்மா 22 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்து வீசினார். ஆனால் அந்த முதல் பந்திலேயே திலக் வர்மா LBW ஆனார். பின்னர் திலக் வர்மா தோனியை போல ரீவிவ் கேட்டார். ஆனால் அந்த ரீவிவ் வீணாக போனது. இந்நிலையில் தோனி இன்று செய்த அந்த DRS-ன் மூலம் யார் இந்திய கிரிக்கெட்டில் DRS கிங் என்பதனை நிரூபித்துள்ளார். மேலும் தோனி ரீவிவ் சிஸ்டம் என்ற வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.





