ஐபிஎல் 16 கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது நடந்து வரும் 12வது லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதி வருகின்றனர். இதுவே ஐபிஎல் 16சீசனில் சென்னை மற்றும் மும்பை நேருக்கு நேராக மோத இருக்கும் முதல் போட்டி என்பதினால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இமயத்தை தொட்டுள்ளது. மேலும் இந்த போட்டி மும்பை அணியின் சொந்த அரங்கமான வான்கடே மைதானத்தில் விளையாடி வருகிறது.

ஐபிஎல் போட்டியின் எல்-கிளாசிகோ :
ஐபிஎல் போட்டிகளில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணியை எதிகொள்ள இருப்பதினால் எதிர்பாப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த இரு அணிகளுக்குமான போட்டி எல்-கிளாசிகோ என்று அழைக்கப்படுவதற்கு காரணம் ஐபிஎல் வரலாற்றில் சென்னை மற்றும் மும்பை அணிக்கு இடையேயான கடுமையான மோதலை இது குறிக்கும்.
என்னதான் இரண்டு போட்டிகளும் இந்தியாவில், வீரர்களுக்கு இடையே நடந்தாலும் சென்னை மற்றும் மும்பை இடையிலான போட்டி ஐபிஎல் தொடங்கியது முதலே இருந்து வருகிறது.குய்ப்பிடத்தக்கவகையில் சொல்ல வேண்டும் என்றால் ஐபிஎல் தொடரில் மொத்தம் சென்னை மற்றும் மும்பை 36 போட்டிகளில் விளையாடி இருக்கிறது. ஆனால் கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் இந்த இரண்டு அணிகளுமே மிகவும் மோசமாக ஆடியது.

சொல்லபோனால் சென்னை சூப்பர் கிங்ஸ் 9 வது இடத்திலும் மும்பை இந்தியன்ஸ் பரிதாபப 10வது இடத்திலும் இருந்தது. அது சென்னை ரசிகர்களுக்கும் சரி, மும்பை ரசிகர்களுக்கும் சரி கஷ்டகாலம் தான். இதனால் இந்த சீசனில் சென்னை மற்றும் மும்பை தங்களுடைய வெற்றி கணக்கை இந்த போட்டி மூலம் தொடரவும் கடுமையாக முயற்சி செய்யும். அப்படியொரு நிலையில் தான் இன்று நடுக்கும் முதல் சென்னை vs மும்பை போட்டியில் முதலில் டாஸ் வெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச முடிவு செய்தது.
#MIvsCSK pic.twitter.com/8VafxHlAbO
— To Rise (@DevRawa09330769) April 8, 2023
ரோஹித் சர்மா அவுட் :
தொடக்கம் எப்போதும் போலவே மும்பை அணிக்கு சரியாகத்தான் இருந்தது. ஆனால் மூன்றாவது ஓவரில் தேஷ்பாண்டே போட்ட கடைசி பந்தில் ரோஹித் சர்மா வேகமாக வந்த பந்தை தடுக்கும் நேரத்தில் அது பேட்டில் இருந்து விலகி நேரடியாக ஸ்டம்பை பதம் பார்த்தது. இந்நிலையில் மும்பைக்கு எதிரான போட்டியில் முதல் விக்கெட்டை எடுத்த மகிழ்ச்சியில் தேஷ்பாண்டே துள்ளி குதித்து ரோஹித் சர்மா விக்கெட்டை கொண்டாடினர். அந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.





