ஐபிஎல் 2023 சீசனில் 12லீக் ஆட்டத்தில் நேற்று நடந்த முதல் சென்னை vs மும்பை போட்டியில் முதலில் டாஸ் வெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச முடிவு செய்தது. இந்நிலையில் தூவக்கம் எப்போதும் போல மும்பை இத்தியன்ஸ் அணிக்கு நன்றாக இருந்தாலும் அவர்களுக்கு காலகாலமாக இருந்து வரம் பிரச்சனை மீண்டும் ஏற்பட்டது. தொடக்கம் முதல் 3 பௌண்டரிகள் 1 சிக்ஸர் அடித்த ரோஹித் சர்மாவை தேஷ்பாண்டே ஆட்டமிழக்க செய்தார்.

அதில் இருந்துதான் மும்பை அணிக்கு விக்கெட்டுகள் விழ ஆரம்பித்தது. பின்னர் 6.4 ஓவரில் இஷான் கிஷான் ஜடேஜாவின் பந்துல ஆட்டமிழக்க பின்னர் தொடர்ந்து வந்த மும்பை அணியின் பேட்ஸ்மேன்ஸ்கள் அதிர்ச்சி கொடுத்து வெளியேற. மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 157 ரன்கள் எடுத்தது அதிகபட்சமாக இஷான் கிஷான் 32 ரன்கள் எடுத்தார். அதுவே மும்பை அணியின் அதிகபட்ச ரன் ஆகும். அதோடு ஒரு அற்புதமான DRS கேட்டு ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்திற்கும் தான் யார் என்பதை காட்டி மிரள விட்டார் தோனி.
இந்நிலையில் முதல் இன்னிக்ஸ் கடைசி பந்தை போட வந்த டுவைன் பிரிட்டோரியஸ் வீசிய 20வது ஓவரின் கடைசிப் பந்து, டிராம்லைனின் சற்று அகலபந்தாக சென்று ஆஃப்-சைடில் பிட்ச் செய்யப்பட்டது. இருப்பினும், ஸ்டிரைக்கில் இருந்த ஹிருத்திக் ஷோக்கீன் அந்த பந்தை அடிக்க முயற்சி செய்து தவற வீட்டார். இதனைஎடுத்து முதல் இன்னிங்ஸ் முடிந்தது என்று அனைவரும் தோனி முதற்கொண்டு அனைவரும் வெளியே சென்று கொண்டிருக்கும் போது மும்பை அணியின் பேட்ஸ்மேன் அகல பந்து என்று DRS கேட்டார்.
— Hardik Swagat (@HardikSwag10143) April 9, 2023
ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் பாதி பேர் மைதானத்தி வீட்டு வெளியில் சென்று விட்டனர். அதோடு தோனி பந்துவீச்சாளர் பிரிட்டோரியஸைப் பாராட்டினார், இருந்தாலும் கிரிக்கெட் விதிமுறைப்படி ஒவ்வொவொரு பந்தும் மிகவும் முக்கியமானது. எனவே அம்பயர் DRS பார்க்க ஒப்புக்கொண்டு மூன்றாவது அமபயரிடம் அது சென்றது. ஆனால் மூன்றாவது அம்பயர் அன்ஹா பணத்திற்கு வைல்ட் எதுவும் கொடுக்கவில்லை.

இப்படி DRS கேட்டுக்கொண்டிருக்கும் போதே தோனி இறுதி முடிவுக்காக காத்திருக்காமல் மைதானத்தை விட்டு வெளியேற முடிவு செய்தார். அவர் மைதானத்திற்கு வெளியே செல்லும் வழியில் பியூஷ் சாவ்லாவுடன் சில நேரம் உரையாடினார். அநேகமாக இந்த விஷயம் பற்றித்தான் பெரும்பாலும் பேசப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக நிலையில் தோனி செய்தது தவறு என்று சிலரும், தோனி செய்தது சரிதான் அது அவருடைய அனுபவம் என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.





