ஐபிஎல் 2023 தொடரின் 44வது போட்டி குஜராத் டைடன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணியும், அகமதபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் பலம் வாய்த்த குஜராத் அணியை வீழ்த்தி அபாரமான வெற்றியை பெற்றது டெல்லி அணி. இந்த போட்டியின் டாஸை வென்று முதலில் கலரமிறங்கிய டெல்லி அணியின் 4 விக்கெட்டுகளை 4 ஓவர்களிலேயே வீழ்த்தி பெரிய அடி கொடுத்தது குஜராத். டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் நோபலில் ரன் அவுட்டானார்.

இருந்த போதிலும் பொறுமையாக ஆடிய அக்சர் மற்றும் அமன் பொறுமையாக விளையாடி ரன்களை குவித்து 20 ஓவர்கள் முடிவில் 130 ரன்களை எடுத்தனர் டெல்லி அணி. இந்நிலையில் 131 ரன்களை எடுத்தால் வெற்றி என்று களம் கண்ட குஜராத் அணியால் 20 வது ஓவர்கள் முடிவில் 125 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. இரண்டாவது இன்னிங்கில் அற்புதமாக பந்து வீசிய இஷாந்த் ஷர்மா 4 ஓவர்களில் 23 ரன்களை விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் டெல்லியின் ஹீரோவாக மாறினார்.
டேவிட் வார்னர் கூறியது :
இந்நிலையில் வெற்றி குறித்து டேவிட் வார்னர் பேசுகையில் “எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். எங்கள் பேட்ஸ்மேன்கள் போராடினார்கள் ஆனால் ஷமியின் பந்துவீச்சுக்கு முன்னல் நிற்க முடியவில்லை. அமன் மற்றும் ரிப்பல் சிங் இருவரும் சேர்ந்து சிறப்பாக விளையாடிய விதம் பாராட்டிற்குரியது. எங்களுடைய அணி விக்கெட்டுகளை இழப்பதற்கு வழிகளை தேடுகிறது. ரன் அவுட் ஆவதை நான் மிகவும் பெறுகிறேன். எங்களுடைய பேட்டிங்கில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.

சரி என்று இன்று முதலில் இறங்கி பேட் செய்ய முயற்சி செய்தோம். ஆனால் அது பலனளிக்கவில்லை. இருந்த போதிலும் அடித்த இன்னிங்கில் பந்தை ஸ்விங் செய்ய முயற்சி செய்து ஆரம்ப விக்கெட்டுக்களை வீழ்த்தலாம் என்று முயற்சி செய்தோம். காயத்தில் இருந்து மீண்டு வந்த கலீல் சிறப்பாக செயல்பட்டார், இஷாந்த் ஷர்மா எப்போதுமே இளமையாக இருக்கிறார்.
ஒரு சயமத்தில் ராகுல் தேவாடியா ஆக்கிரோஷமாக பந்துகளை பறக்கவட்டபோது கொஞ்சம் பயமாக இருந்தது. அவர் சிறப்பாக பேட்டிங் செய்தார். என்ரிச் எங்களின் மிகவும் சிறந்த டெத் பவுலர் ஆனால் இன்று அவர் சிறப்பாக செயல்படவில்லை. ஆனால் எங்களுக்காக என்ன செய்ய வேண்டும் என்பதில் இஷாந்த் தெளிவாக இருந்தார் என்று கூறினார் டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர்.





