ஐபிஎல் 2023ல் நேற்று நடந்த 34 லீக் போட்டியில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இதில் டெல்லி கேபிடல் அணியினர் அதிர்ச்சியூட்டும் வகையில் அபார வெற்றிபெற்றனர். இந்த புள்ளி பட்டியலில் இவ்விரு அணிகளும் கடைசி இடத்திலே இருந்த நிலையில் இந்த போட்டியில் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் இரு அணிகளுமே இருந்தனர்.

முதலில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அணியின் தொடக்க ஆட்டகாரர் பிலிப் சால்ட் முதல் பந்திலே அவுட்டாகி வெளியேற மார்ஷ் 25 ரன்களில் நடராஜனிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின் வந்த சப்ராஸ் கான் மற்றும் ஹக்கீம் கானும் வாஷிங்க்டன் ஓவரில் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.அதன் பின் வந்த மனிஷ் பாண்டே மற்றும் அக்சர் பட்டேல் சேர்ந்து 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை பூர்த்தி செய்தார்கள்.
சன்ரைசஸ் அணியின் பௌலிங்கை சமளிக்க முடியாமல் டெல்லி அணியால் 20 வது ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 144 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.145 ரன்களை எடுத்தால் வெற்றி என களம் கண்ட சன்ரைசஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அணிக்கு நிதனமான தொடக்கத்தையே கொடுத்தனர். ப்ரூக் அதிரடியாக விளையாட நினைத்து நார்க்கியாவிடம் ஸ்டெம்ப் அவுட்டாகி வெளியேறினார். மாயாங் அகர்வால் 49 ரன்களிலே அவுட்டாகி வெளியற அதன் பின்னர் திரிபாதி 15 ரன்களில் வெளியேறினார். சன்ரைசஸ் அணி கையில் இருந்த போட்டியை கொஞ்சம் கொஞ்சமாக நழுவ விட்டு வந்தனர்.

அணியின் கேப்டனும் சொற்ப ரன்களிலே வெளியேற ஹைதராபாத் அணி ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் அடைந்தனர். இதன் பின் வந்த வாஷிங்டன் சுந்தர் மட்டுமே அணியின் இறுதி நம்பிக்கையாக இருந்து ஒரு சில ஷாட்களை அடித்து அணிக்கு தேவையான ரன்களை சேர்த்தார், மறுபுறம் இருந்த க்ளாசென் 31 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து சென்றார். கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை பட்ட நிலையில், சன்ரைசஸ் 137 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. டெல்லி அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
This visual is all 🧡 💙!
— IndianPremierLeague (@IPL) April 24, 2023
Follow the match ▶️ https://t.co/ia1GLIWu00#TATAIPL | #SRHvDC | @SunRisers | @DelhiCapitals | @BhuviOfficial | @davidwarner31 pic.twitter.com/t9nZ95dyJ7
David Warner touched Bhuvneshwar Kumar's feet 🤲💥 respect David Warner 🔥👑 #IPLonStar #IPL2023 #DavidWarner #bhuvi pic.twitter.com/12mnvupsX8
— AYuSH_👻 (@ak_ms_vk_pnn) April 24, 2023
இந்நிலையில் இந்த அற்புதமான வெற்றிக்கு பிறகு டேவிட் வார்னர் தான் முன்னாள் கேப்டனாக இருந்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியன் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாரிடம் சென்று அவரது கால்களை தொட்டார். டேவிட் வார்னர் சான் ரைசெர்ஸ் அணியின் இருக்கும் போது புவனேஷ்வர் குமார் வார்னரின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தார். அப்படியொரு நிலையில் தான் டேவிட் வார்னர் வெற்றிக்கு பிறகு அவரது பாதங்களை தொட்டது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.





