ஐபிஎல் 2023 தொடரின் 64வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் இடையே போட்டியானது தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி அணி சிறப்பாக பேட்டிங் செய்து இறுதியில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு டெல்லி அணி 213 ரன்கள் எடுத்தது. ஆனால் இதனை துரத்திய பஞ்சாப் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
One of the most dramatic matches in IPL history:
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 17, 2023
PBKS needed 33 in the last 6 and even after securing the match on the first ball, Ishant Sharma's No Ball kept PBKS in the game. Crazy match! pic.twitter.com/X0bye8l1FD
இந்நிலையில் இந்த போட்டியில் சில சர்ச்சையான விஷியங்கள் நடந்தது. அதாவது இன்னிங்ஸின் இறுதி ஓவரின் போது லியாம் லிவிங்ஸ்டோன் பேட்ஸ்மேனாக இருக்க இஷாந்த் ஷர்மா வீசிய நான்காவது பந்தை இடுப்பளவு ஃபுல் டாஸ் வீசினார். இதற்கு நடுவர்கள் நோ பால் வழங்கினார்கள். அதே டெல்லி அணி DRS சென்ற போதும் கூட மூன்றாம் நடுவருக்கு செல்லவும் போதும் அது நோ பால் என்று கூறினார் டிவி அம்பயர்.
ஆனால் அந்த பந்தில் லிவிங்ஸ்டன் ஷாட்டை விளையாடும் போது சற்று குனிந்து நின்றதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் முதற்கொண்டு வர்ணனையாளர்களும் சில கேள்விகளை எழுப்பினர். இதன் போது ஐபிஎல் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே, இடுப்பு உயர நோ பால்களை தீர்மானிக்கும் போது மூன்றாவது நடுவரின் நிலைத்தன்மையின் குறைபாட்டை சுட்டிக்காட்டினார்.
I for one seriously cannot understand the rule – the ball in the WPL final that got Shafali Verma out was clearly a no ball if the same rules apply that applied tonight. What is the rule? @IPL https://t.co/fvALsgdnpk
— Parth Jindal (@ParthJindal11) May 17, 2023
அப்படிப்பட்ட நிலையில் தான் இவரின் ட்வீட்டுக்கு டெல்லி கேபிடல்ஸ் அணியின் உரிமையாளர் பார்த் ஜிண்டால் பதில் கொடுத்தார். அவர் அந்த பதிவில் “ஐபிஎல் விதிமுறைகள் எனக்கு குழப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஏனெற்றால் WPL இறுதிப் போட்டியில் ஷஃபாலி வர்மாவை அட்டமிழந்த பந்தும் இதேபோல் தான் வந்தது. நோ பால் என்று அழைக்க வேண்டும் என்று கூறினார். என்னதான் விதிமுறை என்று ஐபிஎல் ? என்று அவர் பதிவிட்டிருந்தார்.
சொல்லப்போனால் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் 2023 இறுதிப் போட்டியின் போது டெல்லி அணியின் ஷஃபாலி வர்மா முதல் இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அப்போது அவருக்கும் இடுப்பளவு ஃபுல் டாஸை தான் வந்திருந்தது. ஆனால் அவர் அவுட் செய்யப்பட்ட பிறகு, வர்மா DRS எடுத்தார். அதில் பந்து அவரது இடுப்பிற்கு மேலே இருப்பது தெரிந்தது.

இருந்த போதிலும் வர்மா அவுட் செய்யப்பட்டார். இதனால் DC முதல் இன்னிங்ஸில் 131/9 மட்டுமே எடுத்தது மற்றும் இறுதிப் போட்டியில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதுபோலவே இந்த சீசனிலும் லக்னோ vs ஹைதராபாத் போட்டியில் 19வது ஓவரின் போது சமத்துக்கு எதிரான மூன்றாவது பந்தின் போது மைத்தனத்தில் உள்ள அம்பயர் நோ பால் கொடுத்தார். ஆனால் DRS செய்ததும் மூன்றாம் நடுவர் அது நோ பால் இல்லை என்று கூறினார். அது அப்போது சர்ச்சையாக மாறியது குறிப்பிடதக்கது.





