கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்றவுடன் எல்லோருக்கும் நினைவில் வருவது தோனி தான். பட்டிதொட்டி எங்கும் இவர் பிரபலம். இவர் கிரிக்கெட் உலகில் செய்த சாதனைகளை விரல் விட்டு சொல்ல முடியாது. அந்த அளவிற்கு இந்தியாவிற்கு பல பெருமை சேர்த்தவர் தோனி .இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த தோனி இந்தியாவிற்கு உலகக்கோப்பைகளை பெற்று தந்ததுமில்லாமல் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாகவும், உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பராகவும் திகழ்ந்து இருக்கிறார்.

இப்படி ஒரு நிலையில் தான் தோனி சினிமா தயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கிறார். தற்போது தோனி அவர்கள் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் தமிழ் மொழியில் LGM என்ற படத்தை எடுத்து இருக்கிறார். இந்த படத்தின் இசைவெளியீட்டு இலாவானது நேற்று சென்னையில் நடந்தது. இதில் பேசிய தோனி படம் பற்றி மட்டுமல்லாமல் சென்னை அணியில் தன்னுடய தோழரான தீபக் சாஹர் பற்றியும் வேடிக்கையாக சில வார்த்தைகளை பேசியுள்ளார்.
தீபக் சாஹர் பற்றி தோனி :
தோனி கூறுகையில் “அவரை பற்றி சொல்வதற்கு எனக்கு வார்த்தைகள் கிடையாது. தீபக் சாஹர் ஒரு போதை பொருள் போன்றவர் என்று குறிப்பிட்ட தோனி, சாஹர் அருகே இல்லை என்றால் அவர் எங்கு இருக்கிறார் என்பதை பற்றி யோசிப்போம் எனவும், அவர் அருகே இருந்தால் அவர் ஏன் இங்கு இருக்கிறார் என்று தோனி வேடிக்கையாக கூறினார். தீபக் சாஹர் முதிர்ச்சியடைவை காண மகிழ்ச்சியாக இருக்கிறது என்று குறிப்பிட்டார் தோனி.

மேலும் தீபக் தன்னுடைய 50 வயதில் முதிர்ச்சியடைவார் என்றும், என்னுடைய 8 வயது மகளை போல அறிவாளியாக இருப்பர் என்றும் கூறினார். மேலும் சாஹர் ஒரு ஒயின் போன்று நீண்ட காலத்தை எடுத்து கொள்வதாகவும் தெரிவித்த தோனி அவர் முதிர்ச்சி அடைவதை என்னுடைய வாழ்நாளில் காண மாட்டேன் என்றும் நகைச்சுவையாக தோனி கூறியுள்ளார் இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பெருமளவு வைரலாகி வருகிறது.
இந்நிலையில் தொனி தீபக் சாஹரை கலாய்ப்பது முதல் முறை கிடையாது ஏற்கனவே பைனலில் கேட்ச் விட்டதற்காக சட்டையில் ஆட்டோகிராப் போட மாட்டேன் என்று தோனி தீபக் சாஹருடன் விளையாட்டு காட்டி அதற்கு பிறகு தோனி தீபக் சஹாரிடம் எத்தனையோ கூறி திட்டியபடி ஆட்டோகிராப் போட்டு குடுத்தார். அப்போது பெருமளவு வைரலானது.

அதே போன்று இதற்கு முன்னர் கூட தோனி சஹாருடன் பல முறை கேடிக்கையாக விளையாடி இருக்கிறார், ஒருமுறை பேட்டிங் செல்வதற்கு முன்னர் பேட்டை கொண்டு முகத்தில் அடிக்குமாறு கொண்டு சென்றார். அதனால் சஹார் அங்கிருந்து ஓடிவிட்டார். அதற்கு பிறகு ஒரு முறை சஹார் பேசிக்கொண்டிருக்கும் போது அவருடை தலையில் தட்டுவது போன்று செய்தார். இப்படி தீபக் சாஹருடனான தோனியின் நட்பு மிகப்பெரியது என்பது இதிலிருந்தே நாம் அறியலாம்.





