எல்ஜிஎம் படத்தில் ஆடியோ வெளியீட்டு விழாவில் தோனி பேசி இருக்கும் விஷயம் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்றவுடன் எல்லோருக்கும் நினைவில் வருவது தோனி தான். பட்டிதொட்டி எங்கும் இவர் பிரபலம். இவர் கிரிக்கெட் உலகில் செய்த சாதனைகளை விரல் விட்டு சொல்ல முடியாது. அந்த அளவிற்கு இந்தியாவிற்கு பல பெருமை சேர்த்தவர் தோனி .

இப்படி ஒரு நிலையில் தான் தோனி சினிமா தயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கிறார். இவர் தனி தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். இதன் மூலம் இவர் ரோர் ஆஃ தி லயன், ப்ளேஸ் டு குளோரி மற்றும் தி ஹிடன் ஹிந்து ஆகிய மற்றும் பட்ஜெட் படங்களை தயாரித்திருந்தார். தற்போது தோனி அவர்கள் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் தமிழ் மொழியில் ஒரு படத்தை எடுத்து இருக்கிறார்.
அந்த படத்தை பல மொழிகளில் அவர் வெளியிட இருக்கிறாராம். இந்த படத்தை ரமேஷ் தமிழ்மணி தான் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு Let’s Get Matried என தலைப்பு வைத்திருக்கின்றனர். சுருக்கமாக LGM என இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாகவும், இவானா கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை நதியா நடித்திருக்கிறார். இந்த நிலையில் தான் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது சென்னையில் நடைபெற்றது.

யோகி பாபு பற்றி தோனி :
இந்நிலையி இந்த இசை வெளியிட்டு விழாவில் தோனி பேசிக்கொண்டிருக்கும் போது அங்கிருந்த தொகுப்பாளர்களின் ஒருவரான பாவனா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ராயுடு ஓய்வு பெற்ற இடத்தில் அவருக்கு பதிலாக யோகி பாபு வர வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு பதிலளித்த தோனி அவருக்கு கிரிக்கெட் போட்டிகளின் மீது ஆர்வம் இருப்பது எனக்கு நன்றாகவே தெரியும்.

யோகி பாபுவை சென்னை அணியில் சேர்த்து கொள்ள நான் வேண்டுமானால் அணி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடந்த முடியும். ஆனால் அவர் அப்படி அணியில் இணைய வேண்டும் என்றால் ஒரே ஒரு கண்டிஷன் இருக்கிறது. அது என்னவென்றால் அவர் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவதற்க்கு நேரம் ஒதுக்க வேண்டும். மேலும் பயிற்சி செய்வதற்கு தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவற்றை அனைத்தும் அவர் செய்கிறேன் என்று ஒப்புகொண்டால் அணியின் நிர்வாகத்திடம் நான் பேச தயார் என்று சிரித்தபடி கூறினார் தோனி.
மேலும் கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்கள் பந்துகளை ஸ்டெம்புகளை பார்த்து வீச மாட்டார்கள் என்றும், அவர்களின் பந்துகள் பேட்ஸன்ட்மேனை நோக்கித்தான் இருக்கும் என்பதால் அவரை அதனையும் சமாளிக்க முடியுமா என்பது அவரே யோசித்து பதில் சொல்லட்டும் என்று அந்த நிகழ்ச்சி முழுவதுமே வேடிக்கையாக பேசி சில முக்கியமாக கருந்துகளை கூறினார் மஹேந்திர சிங் தோனி.





