இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று நீண்ட நாட்களாகிவிட்டாலும் இன்றும் அவரது புகழ் குறையவில்லை அதற்கு முழு காரணம் அவரையே சேரும். உதாரணமாக இந்திய அணிக்காக விளையாடும் போது கேப்டனாகவும், வீரராகவும் சில இக்கட்டான சூழ்நிலைகளில் தோனி பெரிய சாதனைகளை படைத்துள்ளார். அவரது தலைமையில் இந்தியா மூன்று முறை உலகக் கோப்பையையும் வென்றுள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி சென்னை அணியை 10 முறை ஐபிஎல் பைனலுக்கு அழைத்து சென்று 5 முறை கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார். அதனாலேயே தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. தமிழ் நாட்டு மக்கள் பல வட இந்தியர்களை வெறுத்தாலும் அனைவராலும் வெறுக்கப்படாத ஒரு வட இந்தியர் யார் என்றால் அது எம்.எஸ்.தோனி தான்.
இந்நிலையில் இந்த வருட சீசனோடு தோனி விடைபெறுவார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் பரவி வந்த நிலையில் அதற்கு பதிலளித்து முற்றுபுள்ளி வைத்தார் தோனி. ஆனால் ஐபிஎல் போட்டியின் இடையிலேயே தோனிக்கு மூலங்களில் காயம் ஏற்பட்டது. இருந்த போதிலும் தோனி அந்த காயத்தோடே பல போட்டிகளில் விளையாடி வெற்றியும் பெற்று கொடுத்தார். இந்த காயத்தால் தோனி ஓய்வு பெறுவார் என்றிருந்த நிலையில் என்னுடைய ரசிகர்களுக்காக இன்னமும் ஒரு சீசன் விளையாடுவேன் என்று கூறினார்.

வாசிம் அக்ரம் :
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வாசிம் அக்ரம் தோனி குறித்து சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அதில் “தோனி நினைத்திருந்தால் இன்னமும் கொஞ்சம் வருடங்கள் விளையாடி இருக்கலாம், ஆனால் தோனிக்கு தான் எந்த இடத்தில் ஓய்வு பெறவேண்டும் என்று தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல தன்னுடைய ஓய்வை சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அறிவித்தார் என்றார் வாசிம் அக்ரம்.

மேலும் பேசிய அவர் கூறுகையில் “ஒரு அணியுடன் இணைந்து இந்து ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்வது என்பது சாதாரண காரியம் கிடையாது மிகப்பெரிய சவால். ஆனால் தோனி அதனை செய்தும் காட்டியிருக்கிறார். தோனி அனுபவம், அமைதி மற்றும் உடல் ரீதியாக மிகவும் தகுதியானவர். மிக முக்கியமாக, அவருக்கு விளையாடும் ஆர்வம் உள்ளது. நீங்கள் எவ்வளவு உடற்தகுதியுடன் இருந்தாலும், ஆர்வம் இல்லையென்றால், உங்களால் விளையாட்டில் சரியாக விளையாட முடியாது.
தோனி உடல் தகுதி உடையவர் மற்றும் அவர் இந்த வருடன் ஐபிஎல் 2023 சீசனில் எந்த போட்டியிலும் வெளியே அமரவில்லை. கிரிக்கெட் வீரர்கள் ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு, மீண்டும் திரும்புவது கடினம். ஆனால் தோனிக்கு மீண்டும் விளையாட வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் கண்டிப்பாக பயிற்சி எடுப்பர். இருந்த போதிலும் அவர் என்ன செய்ய போகிறார் என்பது அவருக்கு மட்டுமே தான் தெரியும் என்றார் வாசிம்.





