ஐபிஎல் 2023ன் 37வது லீக் ஆட்டத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங் அணி படுதோல்வி அடிந்தது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் இருவரும் ஜோடி சேர்ந்து 4.3 ஓவர்களிலே 50 ரன்களை பூர்த்தி செய்தார்கள். அபாரமாக விளையாடி வந்த ஜெயஸ்வால் 26 பந்துகளிலே அரை சதத்தை அடைந்து அற்புதமாக விளையாடி வந்தார்.

அதன் பின் வந்த அனைவரும் சென்னை அணியின் பௌலிங்கை அனைத்து பக்கங்ககளிலும் அடிக்க அற்புதமாகவே விளையாடி வந்தார்கள். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 202 ரன்களை குவித்தது அபாரமாக விளையாடியது ராஜஸ்தான் அணி. 203 என்ற இமாலய இலக்குடன் களம் கண்ட ருதுராஜ் மற்றும் கான்வே ஆரம்பத்தில் ராஜஸ்தான் அணியின் பௌலிங்கை சமாளிக்க முடியாமல் திணறிய நிலையில் கான்வே 8 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளிறினார்.
அதன் பின்னரே நிதானமாக விளையாடி வந்த ருதுராஜ் 47 ரன்களில் வெளியேற சென்னை அணி ரன்களை உயர்த்த முடியாமல் கஷ்டப்பட்டு வந்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஹானே மற்றும் அம்பதி ராயுடு சென்னை அணிக்கு ஏமாற்றத்தையே அளித்தனர். அதன் பின் டுபே உடன் இணைந்த மொயின் அலி அணிக்கு நம்பிக்கை தரும் வகையில் சில ஷாட்களை அடித்தாலும் 20 ஓவர் முடிவில் 170 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. 32 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த தோல்விக்கு பிறகு பபேசிய தோனி தோல்விக்கான காரணம் குறித்து பேசினார்.

தோனி கூறியது :
அவர் கூறியதாவது “நாங்கள் துரத்த வேண்டிய இலக்கு சற்று அதிகமாக இருந்தது. அதற்கு காரணம் முதல் ஆறு ஓவர்ககளில் அதிக ரன்களை கொடுத்தது தான். ஆனால் அந்த நேரத்தில் பேட்டிங் செய்ய சிறந்தது விக்கெட்டாக இருந்தது. சொல்லப்போனால் பேட்டின் ஓரத்தில் பட்டால் கூட பவுண்டரிகளை நோக்கி சென்றது. எங்களினால் ரன்கள் விழுவதை நிறுத்த முடியவில்லை. பத்திரனா பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது என்பதை நான் உணர்ந்தேன். அவர் மோசமாக பந்து வீசினார் என்று கிடையாது. ஆனால் அவர் சிறப்பாக பந்துவீசியத்தை ஸ்கோர் போர்டில் தெரியவில்லை.
Why does the Sawai Mansingh Stadium remain special for @msdhoni? 🤔
— IndianPremierLeague (@IPL) April 27, 2023
Here's what he said 🔽#TATAIPL | #RRvCSK pic.twitter.com/u4ApgNZHDC
யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பாக பேட்டிங் செய்தார். அவர் எங்களின் பந்துவீச்சாளர்களின் சரியாக கணித்து சில ஆபத்தான முடிவுகளை எடுத்தார். அது எங்களின் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சுலபமாக இருந்தது. ஏனென்றால் நாங்கள் லைன் மற்றும் லெந்தை கணிக்க வேண்டியிருந்தது. ஆனால் அந்த யஷஸ்வி மற்றும் ஜூரல் நன்றாக பேட்டிங் செய்தார்கள். விசாகப்பட்டினத்தி எடுத்த முதல் அரை ODI சதம் எனக்கு 10 ஆட்டங்களை கொடுத்தது. ஆனால் இங்கு 183 ரன்கள் எடுத்தது எனக்கு ஒரு வருடம் வாய்ப்பளித்தது, எனவே இந்த மைதானம் என் இதயத்திற்கு நெருக்கமானது என்றார் தோனி.





