உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது சமீபத்தில் நடக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நடப்பு சாம்பியனான சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல தடுமாறி வருகிறது. இந்நிலையில் நேற்று சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதியது. இதில் என்றும் இல்லாமல் டாஸை வென்ற ருதுராஜ் கெய்க்குவாட் பந்துவீச்சை முடிவு செய்தார். இந்நிலையில் இது அவர்களுக்கு பாதகாமாக சென்றது.

இந்நிலையில் இந்த போட்டியில் அற்புதமாக விளையாடிய குஜராத் அணி 231 ரன்கள் எடுக்க சென்னை அணி 198 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. என்னதான் எம்.எஸ் தோனி கடைசி நேரத்தில் வந்து சில சிக்ஸர்களை பறக்க விட்டாலும் அது சென்னை அணி வெற்றியடைய போதுமானதாக இல்லை. இந்நிலையில் இந்த போட்டியின் போது ஒரு நிகழ்வு நடந்தத. மேலும் அது குறித்த ஒரு அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.
அதாவது இந்த போட்டியில் தோனி விளையாடிக்கொண்டிருந்த போது ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் ஓடிவந்து தோனியை கட்டிப்புடித்தார். மேலும் தோனியின் காலில் விழுந்து வணங்கினார். அதன் போது தோனியும் அந்த ரசிங்கருடன் கொஞ்சம் தூரம் நடந்து சென்று ஏதோ பேசினார். இது குறித்த வீடியோ பதிவும் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது.

இந்நிலையில் அந்த ரசிகரின் பெயர் ஜென. அவருக்கு வயது 21. மேலும் அவர் ஒரு மாணவர். அவரும் அவருடைய சகோதரரும் பாவ்நகரில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த போட்டியின் டி.ஆர்.எஸ்ன் போது ஜெனி அங்கிருந்த உலோக பாதுகாப்பு சுவரை தாண்டி கருப்பு திரையின் பக்கத்தில் தோனியை நோக்கி ஓடிவந்தார். மேலும் ஓடிவந்த அவர் தோனியின் காலில் விழுந்தார். பின்னர் அங்கிருந்த பாதுகாப்பு காவலர்கள் அவரை பிடித்து அழைத்து சென்றனர்.
The Fan touched the feet & then hugged Dhoni – then Mahi saying something to him (maybe to avoid entering the pitch) later trying to protect the fan from the guard. ⭐ pic.twitter.com/OYEGyLa9r4
— Johns. (@CricCrazyJohns) May 11, 2024
இந்நிலையில் அவரின் மீது 447 என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்வு நரேந்திர மோடி மைதானத்தில் முதல் முறையாக நடக்கவில்லை. கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உலக கோப்பை இறுதி போட்டியின் போது கூட ரசிகர் ஒருவர் விராட் கோலியை கட்டிப்பிடித்த நிகழ்வும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.





