ஐபிஎல் 2023 க்கான லீக் போட்டிகளில் 55 போட்டியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின இப்போட்டியானது சென்னை எம்.எ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற உள்ளது. புள்ளி பட்டியலில் சென்னை அணி 2 இடத்திலும் டெல்லி அணி கடைசி இடத்திலும் இருந்து வருகிறது. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன் படி சென்னை அணியின் தொடக்க அட்டகரர்கள் ருதுராஜ் மற்றும் கான்வே நிதானமான தொடக்கத்தையே கொடுத்தனர்.இருப்பினும் டெல்லி அணியின் பௌலிங்கை கஷ்டபட்டு எதிர்கொண்டு வந்தனர். கான்வே 10 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.
அதற்க்கு பின்னரே ருதுராஜ் 24 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேற, மொயின் அலியும் 7 ரன்களில் வெளியேறினார். டெல்லி அணியின் பௌலிங்கை சிறப்பாகவே இருந்து வந்தன. ஆட்டத்தில் டெல்லி அணியின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. அதன் பின் அதிரடியை காட்டத் தொடங்கிய ராய்டு மற்றும் டுபே இணைந்து ரன்களை குவித்து வந்தனர்.
DO NOT MISS!
— IndianPremierLeague (@IPL) May 10, 2023
When @msdhoni cut loose! 💪 💪
Follow the match ▶️ https://t.co/soUtpXQjCX#TATAIPL | #CSKvDC | @ChennaiIPL pic.twitter.com/kduRZ94eEk
12 பந்துகளில் 25 ரன்களை அடித்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து வெளியேறினார். 15 ஓவர்கள் முடிவில் 117 ரன்களை எடுத்திருந்தது. ஆரம்பம் முதலே சென்னை அணியீன் பேட்ஸ்மேன்கள் சற்று திணறியே வந்த நிலையில் மஹேந்திர சிங் தோனி களமிறக்கிக்கினார். அந்த நேரம் மைதானமே விசில் சத்தத்தில் அதிர்ந்தது. ஏனென்றால் விளையாட அதிக பந்துகள் இருப்பதினால் தோனி அதிக நேரம் விளையாடுவார் என்று எதிர்பார்த்தனர்.
This part of life is called happiness 😍#CSKvDC #WhistlePodu #Yellove 🦁💛 @msdhoni pic.twitter.com/gPT4OV2MO2
— Chennai Super Kings (@ChennaiIPL) May 10, 2023
அதற்கு தகுந்தாற் போலவே தோனியும் தன்னுடைய அதிரடி ஆட்டத்தினால் 9 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இத போது தோனி 4 பந்துகளில் 2 சக்ஸர்கள் மற்றும் 1 பவுண்டரியுடன் 19 ரன்களை விளாசினார். இறுதியில் சென்னை அணி 19 ஓவரில் 20 வது ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த 167 ரன்களை அடித்தது.




