எம்.எஸ் தோனி உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். அதற்கு முக்கியமான காரணமே ஒரு ஓவரில் 25 ரன்கள் தேவைப்பட்டாலும் சரி, கடைசி 2 பந்தில் 1 ரன்களும் அதுவும் பாகிஸ்தானுக்கு இடையே நடக்கும் போட்டியாக இருந்தாலும் சரி அந்த அழுத்தமான சூழ்நிலையிலும் சிறப்பாக செயல்ப்ட்டு அணிக்கு வெற்றியை தேடி கொடுப்பார். மேலும் இவரது தலைமையில் இந்திய அணி டி20, ஒருநாள் போட்டி, சாம்பியன் ஷிப் என மூன்று உலக கோப்பைகளை வென்றுள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்கு கேப்டனாக விளையாடி 5 கோப்பைகளையும் சென்னை அணிக்கு பெற்று தந்திருக்கிறார். இந்நிலையில் தோனிக்கு 42 வயதாகிய நிலையில் இந்த சீசனோடு வெளியேறுவார் என்றிருந்த நிலையில் அடுத்த சீசனும் ரசிகர்களுக்காக விளையாடுவார் என்று இறுதிப்போட்டியில் கூறியிருந்தார் தோனி.
தோனி குறித்து இஷாத் சர்மா :
இந்நிலையில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா பேசுகையில் தோனி குறித்து சில அதிர்ச்சியான கருத்துக்களை கூறியுள்ளார். தோனி குறித்து அந்த பேட்டியில் பேசிய இஷாந்த் சர்மா கூறுகையில் “மகேந்திர சிங் தோனி பல அசாதாரணமான திறமைகளை உள்ளடக்கிய ஒருவர். அவற்றில் ஒன்றை கூறவேண்டும் என்றால் பாரபரப்பான சூழ்நிலையில் அமைதியாகவும் தெளிவாகவும் இருப்பது.

ஆனால் தோனி சில நேரங்களில் கடுமையாக கோபப்படுவார். சில நேரங்களில் நானே தோனியிடம் பலமுறை திட்டு வாங்கியிருக்கிறேன். ஒரு முறை நான் பந்தை அவரது கைகளை நோக்கி சரியாக வீசவில்லை. ஆனால் அதே போன்று மூன்று முறை செய்ததினால் சரியாக கைகளை பார்த்து வீசு என்று கொச்சை வார்த்தையில் திட்டினார். இது ஒரு முறை கிடையாது இரண்டு அல்லது மூன்று முறை எனக்கு நடந்திருக்கிறது என்றார் இஷாந்த் கிஷான்.

இந்நிலையில் இவர் இப்படி கூறியது சோசியல் மீடியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது. ஆனால் தோனி கோபப்படுவது முதல் முறை கிடையாது ஏனென்றால் தோனியுடன் பல காலம் ஐபிஎல் போட்டியில் பயணம் செய்த சுரேஷ் ரெய்னா கூட தோனி கோபப்படுவார் என்று கூறியிருந்தார். அதோடு இந்த கடந்த 2023 ஐபிஎல் சீசனில் தோனி போட்டியின் போது ஒரு வீரரை பார்த்து கோவப்பட்டு கத்திய வீடியோ ஓன்று சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி இருந்தது குறிப்பிடதக்கது.

இதனிடையே ஐ.பி.எல் 2023 இல் சிறப்பாக செயல்பட்டதிலிருந்து, இஷாந்த் சர்மா மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இஷாந்த் ஷர்மாவை விட திறமையான பந்து வீச்சாளர்கள் இந்திய அணிக்காக போட்டியிடுவதால் இஷாந்த் சர்மா மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை எனவும் கூறிவருகின்றனர்





