ஐபிஎல் 2022 தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தாவிற்கு இடையேயான போட்டி ஈடன் கார்ட்டனில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதல் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச முடிவு செய்தது. அணியின் பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே அற்புதமாக விளையாடி வந்தனர். கான்வே அற்புதமாக விளையாடி அரை சதத்தை பூர்த்தி செய்தார். ருதுராஜ் 35 ரன்களில் வெளியேற, அவர் சென்ற உடனே கான்வே 56 ரன்களில் வெளியேறினார்.

அதன் பின் ரஹானே மற்றும் டுபே கூட்டணி அமைத்து கொல்கத்தாவின் பந்து வீச்சளரை அனைத்து பக்ககளிலும் அடித்து வான வேடிக்கையை காட்டினார்கள். 16 பந்துகளிலே 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை பூர்த்தி செய்தனர். இந்த கட்டத்தில் துபே 20 பந்துகள் அரை சத்தம் அடிக்கும் நேரத்தில் ஆட்டமிழக்க ரஹானே தொடர்ந்து விளையாடி 29 பந்துகளில் 19 ரன்கள் விலாசினார். இதனால் 20 வது ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்களை குவித்தனர் சென்னை அணி.
இலக்கை துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்கம் மிகவும் மோசமாக இருந்ததால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஒட்டுமொத்த அணியும் 8 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் மகேந்திர சிங் தோனி தலைமையிலான அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை மூலம் இந்த ஐபிஎல் தொடரில் முதல் இடத்திற்கு முன்னேறியது சிஎஸ்கே. இந்நிலையில் இந்த வெற்றிக்கு முக்கியமான காரணம் அஜிங்க்யா ரஹானே.

இந்நிலையில் டாஸை இழந்த தோனியிடம் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு பதிலளித்த தோனி “எங்களுக்கு அதிகமான நம்பிக்கை இருக்கிறது குறிப்பாக வீச்சாளர்களின் மீது. அனைவருமே இதில் பங்கேற்பதுதான் முக்கியம். போட்டியில் ஒரு நல்ல கேட்ச், ஒரு நல்ல ரன் அவுட் எடுத்தால் போதும். நான் ஈடன் கார்ட்டனில் நிறைய கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். இங்கிருந்து 2 மணிநேரம் பயணித்தால் நான் வேலை செய்த கரக்பூர் ரயில் நிலையம் வரும். அங்கிருந்தே பந்தம் தொடர்வதாக நினைக்கிறன் என்றார் தோனி.

தோனியின் வாழ்க்கையை பற்றி சொல்லி தெரியவேண்டியது என்ற அவசியம் கிடையாது. ஏனென்றால் அவரது வாழ்க்கை சுவாரஸ்யங்கள் நிறைந்தது. ராஞ்சியில் பிறந்த தோனி 2001 ஆம் ஆண்டில் இருந்து 2003 ஆண்டுவரையில் காரக்பூர் ரயில் நிலையத்தில் பயண டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வந்தார். அதற்கு பிறகுதான் முழுவதுமாக கிரிக்கெட்டில் முழுவதுமாக கவனம் செலுத்தினர். 23 டிசம்பர் மாதம் 2004ஆம் தேதி தோனி ஒரு நாள் போட்டிகளில் அறிமுகமாக்கி 350 ஒருநாள் போட்டிகள் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.





