இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று நீண்ட நாட்களாகிவிட்டாலும் இன்றும் அவரது புகழ் குறையவில்லை அதற்கு முழு காரணம் அவரையே சேரும். உதாரணமாக இந்திய அணிக்காக விளையாடும் போது கேப்டனாகவும், வீரராகவும் தோனி பெரிய சாதனைகளை படைத்துள்ளார். அவரது தலைமையில் இந்தியா இரண்டு முறை உலகக் கோப்பையையும் வென்றுள்ளது.

சென்னை ரசிகர்களை பொறுத்தவரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் என்று சொன்னால் போதும் முதலில் நியாபகம் வருவது தல எம்.எஸ்.தோனி என்ற பெயர் தான், அந்த அளவிற்கு எம்.எஸ்.தோனிக்கும் சென்னை மண்ணிற்கும் உள்ள ஒரு பிணைப்பை யாராலும் பிரிக்க முடியாது. தமிழ் நாட்டு மக்கள் பல வட இந்தியர்களை வெறுத்தாலும் அனைவராலும் வெறுக்கப்படாத ஒரு வட இந்தியர் யார் என்றால் அது எம்.எஸ்.தோனி தான்.
அந்த அளவிற்கு சென்னை முழுவதும் ‘தல’ என்று அன்புடன் அழைக்கப்படும் தோனியின் இரண்டாவது சொந்த ஊர் சென்னை என்றே சொல்லலாம்.ஐபிஎல் தொடங்கி காலத்திலிருந்து இன்று வரையில் அதிகமுறை ஒரே அணிக்கு கேப்டனாக இருந்த ஒரே வீரர் அது எம்.எஸ்.தோனி தான். அதோடு இவரது தலைமையில் சென்னை அணி நான்கு முறை ஐபிஎல் படங்களை வென்றிருக்கிறது. ஐந்து முறை இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

அதே போல தோனி சென்னை கேப்டனாக நியமனம் செய்யப்பட்டதில் இருந்தே தமிழ் நாட்டில் ஒருவராகவே தோனி மாறிவிட்டார். எப்போதெல்லாம் தோனி சென்னை வருகிறாரோ அப்போதெல்லாம் அவர் தமிழ் மொழியில் பேச அதிகம் முயற்சி செய்வார். ரசிகர்களிடமும் சரி விளம்பரங்களிலும் சரி அவர் தமிழ் மொழியில் பேசி நடித்தும் இருக்கிறார். அதே போல தோனி தயாரிக்கும் முதல் படமே தமிழ் மொழியில் வெளியாகும் படம் தான் என்பது குறிப்பிடதக்கது. அந்த வகையில் தற்போது வீடியோ ஓன்று சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் தோனி தமிழ் மொழியில் பேசும் காட்சிகளை ஒன்றாக தொகுத்து உருவாக்கியுள்ளனர். மேலும் இந்த விடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் தோனி தமிழ் மொழியில் பேசுவது அழகாகத்தான் இருக்கிறது என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது நடந்துவரும் ஐபிஎல் சீசனை பொறுத்தவரையில் சென்னை அணி 4 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகள் தோல்வியும் 2 போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளது.
கடைசியாக ராஜாதான் ராயல்ஸ் அணியுடன் நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதோடு அந்த போட்டி தான் தோனியின் 200வது ஐபிஎல் கேப்டன் போட்டி என்பதினால் சென்னை வெற்றியடையும் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனை தொடர்ந்து வரும் திங்கள் கிழமை RCB அணியுடன் மோத இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.





