இந்தியன் பிரீமியர் லீக்கில் லீக்கின் 37வது ஆட்டத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.. இப்போட்டியானது சாவை மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது.டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடர் இரு தோல்விகளில் இருந்து மீண்டு வர இப்போட்டி தேவை பட்டது. முதலில் களமேரங்கிய ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர், முதல் பந்தை பவுண்டரிக்கு அடித்து ஆட்டத்தை ஆரம்பித்தார் ஜெயஸ்வால்.
— Aakash Chopra (@Aakash_Vani_1) April 27, 2023
சென்னை அணியின் பௌலிங்கை ஆரம்பம் முதலே ராஜஸ்தான் அணி எளிதாக எதிர்கொண்டு வந்தன. இருவரும் ஜோடி சேர்ந்து 4.3 ஓவர்களிலே 50 ரன்களை பூர்த்தி செய்தார்கள். அபாரமாக விளையாடி வந்த ஜெயஸ்வால் 26 பந்துகளிலே அரை சதத்தை அடைந்து அற்புதமாக விளையாடி வந்தார். 27 ரன்களில் வெளியேற, அதன் பின் வந்த அனைவரும் சென்னை அணியின் பௌலிங்கை அனைத்து பக்கங்ககளிலும் அடித்து அற்புதமாகவே விளையாடி வந்தார். அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 13 ரன்களில் வெளியேற, அவருடனே ஜெய்ஸ்வால் அவரும் வெளியேறினார்.
இந்நிலையில் இருந்து சென்னை அணி பௌலிங்ங்கின் மூலம் போட்டியினுள் வர ஹெட்மயர் சொற்ப ரன்களில் வெளியேறினார். அதன் பிறகு வந்த படிக்கல் அணியின் ஸ்கோரை மட மடவென உயர்த்தி வர அவருடன் இணைந்த ஜோரேல் ரன்களை குவித்து வந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 202 ரன்களை குவித்தது அபாரமாக விளையாடியது ராஜஸ்தான் அணி. 203 என்ற இமாலய இலக்குடன் களம் கண்ட ருதுராஜ் மற்றும் கான்வே ஆரம்பத்தில் ராஜஸ்தான் அணியின் பௌலிங்கை சமாளிக்க திணறியே வந்தனர்.

வேகப்பந்து வீச்சாளர்கள் அடிபடுவதைப் பார்த்த தோனி சூழல் வீச்சாளர் மகிஷ் தீக்ஷனாவிடம் பந்தை கொடுத்தார். அவர் வீசிய 8வது ஓவரில் வந்த மகிஷ் ரன்கள் சென்றுகொண்டிருக்கும் வேகத்தை முற்றிலுமாக தடுத்து நிறுத்தினார். அதிரடியான பாணியில் விளையாடிய பட்லர் தீக்ஷனாவின் அபார பந்துவீச்சுக்கு எதிரான கொஞ்சம் திணறினார். இந்நிலையில் தீக்ஷனா தொடர்ந்து இரண்டு முறை பட்லரை அவுட் செய்ய முயற்சி செய்தார்.
Maheesh Theekshana strikes to dismiss the dangerous Shimron Hetmyer. pic.twitter.com/3cfx7ZaJF8
— Cricket is Love ❤ (@cricketfan__) April 27, 2023
அப்படியொரு நிலையில் தான் முதன்முறையாக விக்கெட்டுக்கு பின்னால் நின்ற எம்எஸ் தோனியால் கூட பந்தை பிடிக்க முடியாத அளவுக்கு பந்து திரும்பியது. அந்த வீடியோ தான் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் 16வது ஓவரின் போது சிறப்பான பந்துவீசி அதிரடியாக ஆடும் ஷிம்ரன் ஹெட்மயரை ஆட்டமிழக்க செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





