தன்னுடைய கடின உழைப்பின் மூலம் தமிழ்நாட்டின் சிறிய கிராமத்தில் இருந்து இந்தியா அணிக்கு சென்றவர் கிரிக்கெட் வீரர் நடராஜன். இவர் பல சோதனைகளை கடந்து தற்போது சாதனையாளராக ஐபிஎல் மற்றும் டிஎன்பிஎல் போன்ற போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்நிலையில் தான் ஒரு மைத்தனத்தை கட்டி தன்னை போலவே உள்ள திறமையான வீரர்கள் விளையாட வேண்டும் என்று நவீன வசதிகளுடன் கூடிய ஒரு மைத்தனத்தை கட்ட வேண்டும் என்ற கனவை நினைவாகியுள்ளார் நடராஜன்.

நடராஜன் கட்டியிருக்கும் அந்த மைதானம் இன்று தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், காசி விசுவநாதன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகிகள், நடிகர் யோகி பாபு, kPY பாலா போன்ற பல வீரரர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு நடராஜனை வாழ்த்தினார்கள். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் போது பேசிய தினேஷ் கார்த்திக் நடராஜனை புகழ்ந்து தள்ளியிருந்தார்.
அவர் கூறுகையில் “நான் இங்கே வந்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நடராஜனை நான் முதலில் தமிழ்நாட்டிற்கு விளையாடும் போது பார்த்தேன். அவருடைய கிரிக்கெட் வாழ்கை அனைவருக்கும் நம்பிக்கையை கொடுக்க கூடியது. எனக்கு அவரிடம் பிடித்த விஷயம் ஒரு இடத்திற்க்கு செல்வதற்கு பலர் உதவி செய்வார்கள். ஆனால் அப்படி அந்த இடத்திற்கு செல்லும் போது உதவி செய்த்தவர்கள் மறந்து விடுவார்கள். ஆனால் நடராஜன் அப்படி கிடையாது, அந்த குணம் அவரிடம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

ஏனென்றால் JB என்கிற அவருடைய பயிற்சியாளரை இன்னமும் மறக்காமல் மதிப்பு கொடுத்து தன்னை போல பல வீரர்கள் வரவேண்டும் என்று மைத்தனத்தை காட்டியுள்ளார். முதன் முறையாக ஒரு சிறிய ஊரில் இருந்து வந்து தன்னால் பெரிதாக ஒன்றை சாதிக்க முடியும் என்று காட்டியவர் எம்.எஸ்.தோனி. அப்படிதான் நடராஜனும் சிறிய ஊரில் இருந்து வந்து இந்தியாவிற்காக உலக அரங்கில் விளையாடினார்.
சொல்லப்போனால் நான் கடைசியாக விளையாடிய உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியின் போது ரிக்கி பாண்டிங், மாத்தியூ எய்டன் போன்ற ஜாம்பவங்கள் ஏன் நடராஜன் ஐபிஎல் போட்டிக்கு பிறகு இந்தியாவிற்காக விளையாடவில்லை என்று கேட்பதை, நடராஜன் ஆஸ்திரேலியாவில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்பதை அதன் மூலம் காணலாம். அதுதான் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரரின் அழகு, மற்றவர்களை போல இல்லாமல் நடராஜன் உதவி செய்தவர்களை மறக்கவில்லை.

பலர் தமிழ்நாட்டிற்காக விளையாடி இந்தியாவிற்காக சென்றிருக்கின்றனர். ஆனால் இப்படியொரு மைத்தனத்தை கட்டி தன்னை விடவும் பல வீரர்கள் சிறப்பாக விளையாட வேண்டும் என்று நினைப்பது பெரிய விஷயம். நானும் பல கிரிக்கெட்டுகளை ஆடியிருக்கிறேன் ஆனால் இப்படி ஒரு மைத்தனத்தை கட்ட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றவில்லை. ஆனால் இதனை நடராஜன் செய்திருக்கிறார் எனும் போது பெருமையாக இருக்கிறது.
ஏனெனில் இப்போது நாம் இவ்வளவு அழகான கிரிக்கெட் மைத்தனத்தை பார்க்கிறோம் என்றால் இது சாதாரண காரியம் கிடையாது. இப்போது வேண்டுமானால் பலர் இந்த மைத்தனத்தில் முதலீடு செய்ய வரலாம், ஆனால் தொடக்கத்தில் இருந்து இவ்வளவு கடினமாக உழைத்து தன்னை போலவே பல வீரர்கள் வரவேண்டும் என்று அவர் செய்த இந்த விஷயம் மிகப்பெரியது என்றார் தினேஷ் கார்த்திக்.





