ஐபிஎல் 2023 தொடரில் 61 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதல் டாஸ் வென்ற சேனனி அணி பேட்டிங் செய்யும் தேர்வு செய்தது. ஆனால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்நிலையில் அடுத்ததாக களமிறங்கிய கொல்கத்தா அணி சிறப்பாக ஆதி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டி சென்னை மைத்தனத்தில் நடப்பதினாலும் இந்த சீஸனில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடும் கடைசி போட்டி இது, இதற்கு பிறகு சென்னை அணி பிளே ஆஃப் சென்றால் மட்டுமே CSK சென்னை மைதானத்தில் விளையாடும் என்பதினால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பது இருந்தது. ஆனால் சென்னை அணி தோல்வி அடைந்ததினால் ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர்.
அப்படிப்பட்ட நிலையில் தான் சென்னை அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரும் வெஸ்ட் இன்டியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டனுமாகிய வைன் பிராவோ இந்த போட்டிக்கு முன்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பக்கம் வெளியிட்டிருந்த வீடியோ ஒன்றில் பேசியிருந்தார். அதில் சென்னை ரசியர்களை பற்றியும், இந்தியா முழுவதும் CSK அணிக்கு கிடைக்கும் ஆதரவு பற்றியும் பேசியிருந்தார்.
One final time this league stage @ Anbuden! Here's a special preview with our bowling coaches Eric and DJ Bravo 📹#CSKvKKR #WhistlePodu #Yellove 🦁💛 @TVSEurogrip pic.twitter.com/xthKDIhrRT
— Chennai Super Kings (@ChennaiIPL) May 14, 2023
ட்வைன் பிராவோ கூறியது :
உலகின் மிகப்பெரிய ரசிகர்களின் கூட்டம் எங்களிடம் உள்ளனர். சென்னை மட்டுமல்ல, இந்த சீசனில் இதுவரை எங்களுக்கு சொந்த மைத்தனத்தில் இருந்து வெளியில் சென்று விளையாட இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஏனென்றால் நாங்கள் செல்லும் எல்லா இடங்களிலும் மஞ்சள் நிறைந்துள்ளது. அதுதான் ரசிகர்கள் தலை மீது வைத்திருக்கும் அன்பு என்று ட்விட்டரில் சி.எஸ்.கே வெளியிட்ட வீடியோவில் கூறினார் ட்வைன் பிராவோ.

மேலும் பேசிய அவர் கூறுகையில் ரசிகர்கள் எங்களுக்கு இவ்வளவு ஆதரவு தருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. 14ஆம் தேதி நடக்கும் ஆட்டம் தான் இந்த சீசனில் எங்களுடைய கடைசி சென்னை மைதானத்தில் விளையாடும் விளையாட்டு. நாங்கள் பிளேஆஃப்களுக்கு வந்தால் ரசிகர்கள் மீண்டும் எண்ணிக்கையில் ஆதரவு தர வருவார்கள். ஏனென்றால் பிளே ஆஃப் போட்டிகள் இங்கே நடைபெற போகிறது. அப்படி நடந்தால் கண்டிப்பாக அது மஞ்சள் கொண்டாட்டமாக இருக்கும் என்றார் ட்வைன் பிராவோ.
புள்ளி பட்டியலை பொறுத்தவரையில் சென்னை அணி 13 போட்டிகள் விளையாடி அதில் 7 போட்டிங்களில் வெற்றி பெற்று 15 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறது. கொல்காத்தா அணியை பொறுத்தவரையில் 12 புள்ளிகளுடன்7வது இடத்தில் இருக்கிறது. மேலும் சென்னை அணி அடுத்ததாக டெல்லி கேபிடல்ஸ் அணியை வரும் 20ஆம் தேதி எதிர்கொள்ள இருக்கிறது. அந்த போட்டியில் வெற்றியடைந்தால் கண்டிப்பாக சென்னை அணி பிளே ஆஃப் செல்லும் என்பதில் சந்தேகமே இல்லை.





