இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று நீண்ட நாட்களாகிவிட்டாலும் இன்றும் அவரது புகழ் குறையவில்லை அதற்கு முழு காரணம் அவரையே சேரும். உதாரணமாக இந்திய அணிக்காக விளையாடும் போது கேப்டனாகவும், வீரராகவும் சில இக்கட்டான சூழ்நிலைகளில் தோனி பெரிய சாதனைகளை படைத்துள்ளார். அவரது தலைமையில் இந்தியா மூன்று முறை உலகக் கோப்பையையும் வென்றுள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி சென்னை அணியை 10 முறை ஐபிஎல் பைனலுக்கு அழைத்து சென்று 5 முறை கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார். மேலும் இந்த வருடம் நடந்த ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் 182.45 என்ற அபார ஸ்டிரைக் ரேட்டில் 104 ரன்கள் எடுத்தார். மேலும் ஸ்டம்புகளுக்குப் பின்னால் வழக்கம் போல் மின்னல் வேகத்தில் ஸ்டாம்பிங் செய்வது இவருக்கு வயதே ஆகாத என்ற கேள்வியை ரசிகர்களுக்கு எழுப்பியது.
இந்நிலையில் இந்த வருட சீசனோடு தோனி விடைபெறுவார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் பரவி வந்த நிலையில் அதற்கு பதிலளித்து முற்றுபுள்ளி வைத்தார் தோனி. ஆனால் ஐபிஎல் போட்டியின் இடையிலேயே தோனிக்கு மூலங்களில் காயம் ஏற்பட்டது. இருந்த போதிலும் தோனி அந்த காயத்தோடே பல போட்டிகளில் விளையாடி வெற்றியும் பெற்று கொடுத்தார். இந்த காயத்தால் இந்த சீசனோடு தோனி ஓய்வு பெறுவார் என்றிருந்த நிலையில் என்னுடைய ரசிகர்களுக்காக இன்னமும் ஒரு சீசன் விளையாடுவேன் என்று கூறினார்.

இந்நிலையில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கர்களான வினய் குப்தா மற்றும் நிகில் குப்தா என்பவர்கள் இருவரும் இணைந்து தங்களுடைய விரும்பமான கேப்டனான எம்.எஸ் தோனியின் அற்புதமான சுவரோவியம் ஒன்றை வரைந்துள்ளார். தோனி ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்ற பிறகு ஸ்டம்பை தூக்கும் படியாக வரையப்பட்ட அந்த ஓவியத்தின் வீடியோ சோசியல் மீடியாவில் ஏற்கனவே 6 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன் வைரலாகியுள்ள நிலையில் பல்வேறு சமூக ஊடக தளங்களில் பலரும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
இந்நிலையில் MS தோனிக்கு ஆதரவாக ரசிகர்கள் சுவரோவியங்கள், படங்கள் அல்லது தங்கள் வீட்டின் வண்ணங்களை சென்னை அணியின் ஜெர்சியின் நிறத்தில் மாற்றுவது போன்றவைகள் முதல் முறை கிடையாது. சொல்லப்போனால் கடந்த ஐபிஎல் போட்டிக்கு முன்னதாக சென்னை மற்றும் சேப்பாக்கத்தில் உள்ள தெருக்கள் கிரிக்கெட் வீரரின் பல சுவரோவியங்களால் நிரம்பியிருந்தன.
மேலும் உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் தாங்கள் வரைந்த ஓவியங்கள் பலவற்றை பல்வேறு சமூக ஊடக தளங்களில் பகிர்ந்து கொண்டனர். அவற்றில் பல ஐபிஎல் போட்டியின் போது பெருமளவு சோசியல் மீடியாவில் வைரலானது. அதோடு சமீபத்தில் கூட சேப்பாக்கம் அணியின் மாதிரி வடிவத்தை ரசிகர்கள் தயார் செய்து தோனிக்கு பரிசளித்தும் சோசியல் மீடியாவில் வைரலானது குறிப்பிடதக்கது.





