ஐபிஎல் 2023தொடரின் 58வது போட்டி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் SRH vs LSG இடையே ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 182 ரன்கள் குவித்தது. அபிஷேக் சர்மா ஆரம்பத்திலேயே 7 ரன்களில் ஆட்டமிழக்க, அதற்கு பிறகு வந்த ராகுல் திரிபாதிஅதிரடியாக விளையாடி 13 பந்துகளில் 20 ரன்களை விளாசினார்.

அதற்கு பிறகு வந்த அன்மோல்ப்ரீத் சிங் சிறப்பாக விளையாடு 27 பந்துகளில் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் மார்க்கரம் 28 ரன்களில் ஆட்டமிழக்க அதிரடியாக ஆடிய க்ளாஸென் 29 பந்துகளில் 47 ரன்களை விளாசினார். பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடினாலும் ஒரு கட்டத்தில் 200 ரன்களுக்கு மேலே ஹைதராபாத் அணி எடுக்கும் என்றிருந்த நிலையில் இறுதியில் 182 ரன்கள் மட்டுமே அடித்தது.
இந்நிலையில் 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் அணியின் வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். கெய்ல் மேயர்ஸ் ஆரம்பத்திலேயே திணறி 2 ரன்களில் ஆட்டமிழந்த நிலையிலும் குவிண்டன் டீ காக் அதிரடியாக 3 பவுண்டரி 1 சிக்சருடன் 29ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
𝗧𝗿𝗶𝗽𝗹𝗲 𝗧𝗿𝗲𝗮𝘁!
— IndianPremierLeague (@IPL) May 13, 2023
Relive the three sixes from @nicholas_47 that changed it all 💥💥💥#TATAIPL | #SRHvLSG https://t.co/T3IyHw8HbI pic.twitter.com/bG6Hz6mQBr
ஆனாலும் ஸ்டோனிஸ் சிறப்பாக விளையாடி 40 ரன்களை விளாசினார். அப்படிப்பட்ட நிலையில் தான் அடுத்து வந்த 5-வது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த அட்டகாசமான பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன, தனது இன்னிங்ஸின் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தார். அதன்பிறகு அவரும் அடுத்த இரண்டு பந்துகளை சிக்ஸருக்கு எல்லைக்கு அப்பால் அனுப்பினார்.
The incredible Stoinis 🔥 😤 with some Super Giant hits 🙌#SRHvLSG #IPLonJioCinema #TATAIPL #IPL2023 #EveryGameMatters | @LucknowIPL @MStoinis pic.twitter.com/WTCMrUyOUQ
— JioCinema (@JioCinema) May 13, 2023
இதற்குப் பிறகும் தன்னுடைய ஆவேசமாக பேட்டிங்கை தொடர்ந்து செய்த பூரான் 13 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுபுறம் நல்ல கிரிக்கெட்டை காட்டிய மன்கட் பிரமாதமாக 45 பந்துகளில் 64 ரன்களை எடுத்திருந்தார். இறுதியில் லக்னோ அணி 4 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.

புள்ளி பட்டியலை பொறுத்தவரையில் சில போட்டிகளுக்கு பிறகு வெற்றி பெற்றுள்ள லக்னோ அணி 12 போட்டிகள் விளையாடி 6 போட்டிகளில் வெற்றியுடன் 12 புள்ளிகள் எடுத்தது 4வது இடத்தில் இருக்கிறது





